இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராக இருப்பவர் ரிஷப் பண்ட். இளவயதிலேயே அதிரடி ஆட்டக்காரர் என்று பெயர் எடுத்திருப்பவர். இவர் ஐபிஎல்லில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்கிறார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பண்ட் இந்த சீசனில் இதுவரை பெரிதாக சோபிக்கவில்லை. அவர் விளையாடிய 11 ஆட்டங்களீல் 281 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். அதில் அதிகபட்சம் 44 ரன்கள் ஆகும்.
இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ளவிருக்கும் சூழலில் ரிஷப் பண்ட் இன்னமும் அதிரடியாக விளையாட வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் மேலும் பேசுகையில், “20 ஓவர் போட்டி வடிவத்தில் ரிஷப்பண்ட் தனது ஆட்டத்தின் போக்கை மாற்றக் கூடாது. அவர் ஆண்ட்ரே ரசல்போல் அதிரடியாக விளையாட வேண்டும்.
பந்து வீச்சாளர் யாராக இருந்தாலும் கவலைப்படாமல் அதிரடியாக விளையாட வேண்டும் என்றால் அடித்து நொறுக்குங்கள். நீங்கள் எதிர்பார்ப்பதைவிட அதிகமான போட்டிகளில் வெற்றிபெறக்கூடும்.
மேலும் படிக்க | வீரர்களிடம் இரக்கமில்லாமல் இருக்க வேண்டுமென்றேன் - குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா
ரசல், தனது மனநிலையில் மிக தெளிவாக இருக்கிறார். அவர் களம் இறங்கியவுடன் அதிரடியாக விளையாடுவார். அந்த பாணியில் ரிஷப் பண்ட் விளையாடுவதற்கு முற்றிலும் திறமையானவர். அவர் தனது ஆட்டத்தின் போக்கை மாற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை” என்றார்.
மேலும் படிக்க | ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் ரவீந்திர ஜடேஜா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe