ஐபிஎல் 2022 தொடருக்கான மெகா ஏலம் நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே செல்கிறது.  ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற உள்ளதாகவும்,  ஏலத்தில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஜனவரி 17 என்றும் கூறப்படுகிறது.  மேலும் இந்த ஏலம் பெங்களூருவில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.  


ALSO READ | மும்பை அணியை பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - சஞ்சீவ் கோயங்கா


சென்னை, மும்பை, பெங்களூர் போன்ற 8 அணிகளில் இருந்து தற்போது வரை 27 வீரர்கள் தக்கவைக்கபட்டுள்ளனர்.  1000 வீரர்கள் இந்த ஏலத்தில் பதிவு செய்து இருந்தாலும், கடைசியில் ஏலத்தில் 250 பேர் மட்டுமே இடம் பெற உள்ளனர்.  மேலும் இது குறித்த பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. தற்போது ஓவ்வொரு அணி உரிமையாளர்களிடமும் ஏலத்திற்கான தேதிகள் விவாதிக்கபட்டு வருகிறது.  முன்னதாக, பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஏலம் நடைபெறும் என்று பரவலாக பேசப்பட்டது.



கோவிட்-19 தொற்று மோசமடையாவிட்டால், ஐபிஎல் மெகா ஏலம் திட்டமிட்டபடி இரண்டு நாள் நிகழ்வாக பெங்களூரில் நடைபெரும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  சமீபத்தில் லக்னோ அணி முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீரை அதன் ஆலோசராக நியமித்தது.  இரண்டு புதிய அணிகளும் பல முன்னணி வீரர்களை தங்களது அணியில் எடுக்க போட்டி போட்டு வருகின்றன.  


ALSO READ | தோனியா? கோலியா? 2021-ல் அதிகம் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR