2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியலை யாகூ (Yahoo) நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், 2017 ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடி முதல் இடத்தில் இருக்கிறார். 2019 ஆம் ஆண்டு மட்டும் சுஷாந்த் ஷிங் ராஜ்புத் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார். இந்த ஆண்டுக்கான லிஸ்டில் இரண்டாவது இடத்தில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளார். விளையாட்டு வீரர்களுக்கான பிரிவில் அவர் தான் முதலிடம்.
மேலும் படிக்க | IPL2023: தோனி ஹூக்கா மிகவும் விரும்பி பிடிப்பார் - ஜார்ஜ் பெய்லி
அவருக்கு அடுத்தபடியாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி உள்ளார். 2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றுவிட்டாலும், தொடர்ந்து ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதனால், இணையவாசிகள், தோனியின் பெயரை அதிகம் இணையத்தில் தேடியுள்ளனர். ஒட்டுமொத்தமாக தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளார்.
20 ஓவர் உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலியை, ஒருநாள் கேப்டன்ஷிப்பில் இருந்தும் பிசிசிஐ நீக்கியது. இது கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. பிசிசிஐ தலைவர் கங்குலி, 20 ஓவர் போட்டி கேப்டன் பொறுப்பில் விலக வேண்டாம் என கேட்டுக்கொண்டபோதும் கோலி விலகியது அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறினார். அவருக்கு பதிலளித்த விராட் கோலி, தன்னை யாரும் அப்படி கேட்கவில்லை, ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பில் நீடிக்கிறேன் என கூறியபோதும், என்னை நீக்கிவிட்டார்கள் என தெரிவித்தார். இருவரின் இந்த பேட்டிகளும் பூதாகரமாக வெடித்தது. இதனையடுத்து, அவர்களைப் பற்றிய அப்டேட்டுகள் நாள்தோறும் வந்த வண்ணம் இருந்ததால், கோலியை இணையவாசிகள் அதிகம் தேடியுள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக, ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பி.வி.சிந்து ஆகியோரையும் இணையவாசிகள் அதிகம் தேடியுள்ளனர்.
மேலும் படிக்க | IPL 2023: தோனியின் சரவெடி.. சேப்பாக்கத்தில் தொலைந்த பந்துகள்..! சம்பவம் இருக்கு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR