சென்னை அணி பிளேஆஃப்பிற்கு தகுதி பெற செய்ய வேண்டிய விசயங்கள்!
சென்னை அணி தனது முதல் நான்கு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஐபிஎல் தொடரின் வரலாற்றில் முதல் முறையாக தொடர்ந்து நான்கு தோல்விகளை சந்தித்து உள்ளது. இந்த சீசனில் இதுவரை ஆடிய ஆட்டத்தில் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு தவறை சிஎஸ்கே செய்து வருகிறது. பேட்டிங், பவுலிங், பவர்ப்பிளே என முக்கிய இடங்களில் சொதப்பி வருகிறது. தற்போது பாயிண்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்தில் உள்ளது சிஎஸ்கே.
மேலும் படிக்க | குல்தீப் சுழலில் குழியில் விழுந்த கொல்கத்தா! டெல்லி அபார வெற்றி!
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி, முக்கிய வீரரான ஃபாஃப் டு பிளெசிஸை அணியில் எடுக்க தவறியது. இது தற்போது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது. நியூசிலாந்தின் டெவோன் கான்வேயை ஃபாஃபுக்கு பதிலாக சிஎஸ்கே மாற்ற விரும்பியது. இருப்பினும், பாப் இடத்தை அவரால் நிர்ப்பமுடியவில்லை. கடந்த ஆண்டு ஆரஞ்சு கேப் கைப்பற்றிய ருதுராஜ் கெய்க்வாட், இந்த சீசனில் ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வருகிறார். ராபின் உத்தப்பா ஒருபுறம் நன்றாக ஆடினாலும், நல்ல ஒரு ஓப்பனிங் பட்னர்ஷிப் கிடைக்கவில்லை. அம்பதி ராயுடும் மறக்க முடியாத ஆட்டத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை.
தீபக் சாஹரை ஏலத்தில் CSK மிக அதிக விலை கொடுத்து வாங்கியது. இருப்பினும், அவர் தற்போது காயத்தால் அவதிபட்டு வருகிறார். சிஎஸ்கே பவுலிங்கில் மிகவும் மோசமாக உள்ளதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். கிறிஸ் ஜோர்டான், டுவைன் பிராவோவின் ஃபார்ம் மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. நம்பிக்கையான ஒரு பவுலர் தற்போது சிஎஸ்கே அணிக்கு இல்லை என்பதே உண்மை. இரண்டாவது போட்டியில் எளிதில் வெற்றி பெற வேண்டிய இடத்தில் டுபேவின் மோசமான பவுலிங் ஆட்டத்தையே மாற்றியது.
சஹார் அணிக்கு திரும்பும் வரையில், நல்லதொரு பவுலிங் லைன்அப்பை சென்னை அணி ஏற்படுத்த வேண்டும். தொடக்க ஆட்டக்காரராக கான்வேயை களமிறக்கி எதிரணியை கலங்கடிக்க செய்ய வேண்டும். பவர் பிளேயில் அதிக ரன்கள் அடிப்பது என்றுமே அணிக்கு பக்கபலம் தான். அடுத்ததாக ஆர்.சி.பி அணியுடன் சென்னை மோத உள்ளது. இந்த போட்டியிலும் தோல்வி பெரும் பட்சத்தில் சென்னை அணியின் பிளே ஆப் கனவு இந்த ஆண்டு முடிவுக்கு வந்துவிடும்.
மேலும் படிக்க | சென்னை அணியின் தோல்விக்கான 4 காரணங்கள் இவை தான்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR