IPL2022: நேற்றைய போட்டியில் ஆர்.சி.பி செய்த தவறு இதுதான்!
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்.சி.பி அதிக ரன்கள் அடித்தும் தோல்வி அடைந்தது.
ஐபிஎல் 2022 சீசனில் நேற்றைய போட்டியில் ஆர்.சி.பி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி அணி சிறப்பாக விளையாடி 205 ரன்கள் குவித்தது. மிக பெரிய இலக்கை டார்கெட் ஆக செட் செய்துள்ளோம் என்று எண்ணி களமிறங்கிய ஆர்.சி.பி அணிக்கு பஞ்சாப் அணி மிகவும் சவாலாக இருந்தது. 19 ஓவரிலேயே 208 ரன்கள் அடித்து இந்த போட்டியில் வெற்றி பெற்றது பஞ்சாப் அணி. இதனால் ஆர்.சி.பி ரசிகர்கள் மிகவும் கவலைக்கு உள்ளாயினர்.
மேலும் படிக்க | PBKSvsRCB: பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்ற பஞ்சாப்!
ஆர்.சி.பி அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து புதிய கேப்டனாக ஃபாஃப் டு பிளெசிஸ் தேர்வு செய்யப்பட்டார். பேட்டிங்கில் எந்த வித குறை சொல்லும் அளவிற்கு விளையாட வில்லை என்றாலும், பவுலிங்கில் மிகவும் சொதப்பியது. ஆரம்பத்தில் இருந்தே மிகவும் மெத்தனமாக ஆர்.சி.பி பவுலர்கள் பந்து வீசினர். 13வது ஓவர் தொடங்கி 17வது ஓவர் வரை நன்றாக பந்து வீசினாலும், 18வது ஓவரை சிராஜிடம் கொடுத்தது மிகப்பெரிய தவறாக அமைந்தது. அந்த ஓவரில் மட்டும் 6, Wd, 4, 6, 1, L1, 6 மொத்தமாக 25 ரன்கள் பஞ்சாபிற்கு கிடைத்தது. இந்த ஒரு ஓவர் போட்டியை மொத்தமாக மாற்றியது.
கடந்த சீசன்களில் சிராஜ் அதிக ரன்களை கொடுத்தாலும், விராட் அருகில் இருந்து அவருக்கு சில யோசனைகளை கொடுப்பார். இந்த முறை டு பிளெசிஸ் அதனை செய்ய தவறினார். ஒவ்வொரு முறை சிக்ஸர்கள் பறக்கும் போதும் டு பிளெசிஸ், தினேஷ் கார்த்திக் மட்டுமே பவுலரிடம் பேசினர், ஆனால் கோலி பவுண்டரி முனையில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். சிராஜ் 4 ஓவர்களில் 59 ரன்களை விட்டு கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார், மேலும், 14 ஒயிட் பால்களை வீசியுள்ளார். ஆர்.சி.பி மொத்தமாக 22 ரன்களை extra- வாக கொடுத்தது. இதுவும் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதுவரை ஒரு சீசனில் கூட கோப்பையை வெற்றி பெறாத ஆர்சிபி இந்த சீசனில் நிச்சயம் அடிக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கும் போது, பவுலிங்கில் மிகவும் சொதப்பி வருகிறது. பெரிதாக சொல்லி கொள்ளும் அளவிற்கு ஆர்சிபி அணியில் பவுலிங் இல்லாததும் பெரும் குறையாக பார்க்கப்படுகிறது. வருகின்ற போட்டிகளில் தவறை திருத்தி கொண்டு எழுச்சி பெரும் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க | முதல் போட்டியில் தோற்றால் சென்னை சாம்பியன் ஆகாதா?!- உண்மை என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR