PBKSvsRCB: பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்ற பஞ்சாப்!

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.   

Written by - RK Spark | Last Updated : Mar 27, 2022, 11:45 PM IST
  • பேட்டிங்கில் அதிரடி காட்டிய இரண்டு அணிகள்.
  • சிறப்பாக ஆடிய ஸ்மித்.
  • ஒரு அணியாக வெற்றி பெட்ரா பஞ்சாப்.
PBKSvsRCB: பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்ற பஞ்சாப்!  title=

ஐபிஎல் 2022-ன் மூன்றாவது போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி DY பட்டில் ஸ்டேடியத்தில் இரவு7.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக களமிறங்கினார் ஃபாஃப் டு பிளெசிஸ், மேலும் பஞ்சாப் அணியின் கேப்டனாக முதல் முறையாக களமிறங்கினார் மயங்க் அகர்வால். டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. 

மேலும் படிக்க | இந்த தடவை ஆரஞ்ச் கேப் விராட் கோலிக்குதானாம்- எப்படி தெரியுமா?

சென்னை அணியின் ஓபனிங் வீரராக களமிறங்கி அதிரடி காட்டும் ஃபாஃப் டு பிளெசிஸ், ஆர்சிபி அணியிலும் அதனை தொடர்ந்தார். பேட்டிங்கில் மாஸ் காட்டிய டு பிளெசிஸ் 57 பந்தில் 7 சிக்சர் 3 பவுண்டரிகள் என 88 ரன்கள் குவித்தார். மறுபுறம் அனுஜ் ராவத் 20 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 29 பந்துகளில் 2 சிக்ஸர் கள் உட்பட 41 ரன்களை அதிரடியாக குவித்தார். அதன் பிறகு வந்த தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 3 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 32 ரன்களை விளாசினார்.  ஆர்.சி.பி-ன் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 205 ரன்கள் குவித்தது. 

 

கடினமான இலக்கை எதிர்த்து ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஓபனிங் சிறப்பாக அமைந்தது. கேப்டன் மயங்க் அகர்வால் மற்றும் ஷிகர் தவான் கூட்டணி பவர் பிளேயில் விக்கெட்களை கொடுக்காமல் விளையாடியது. தவான்  43 ரன்களுக்கும், மயங்க் அகர்வால் 32 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த ராஜபக்சா 22 பந்தில் 4 சிக்சர்கள் விளாசி 43 ரன்களை அதிரடியாக விளாசினார். இதனால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. 

 

14வது ஓவரை வீசிய சிராஜ், ராஜபக்ச மற்றும் ராஜ் பவா ஆகியோரது விக்கெட்டை அடுத்தடுத்த பந்துகளில்  வீழ்த்தினார். இதனால் போட்டி சற்று ஆர்சிபி பக்கம் தலை தூக்கியது. இருப்பினும் கடைசியாக வந்த ஒடியன் ஸ்மித் தான் யார் என்பதை நிரூபித்து காட்டினார். 8 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என முக்கியமான 25 ரன்களை அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். மறுபுறம் ஷாருக் கான் தன் பங்கிற்கு 24 ரன்கள் அடித்தார்.  200 ரன்களுக்கு மேல் என்ற கடினமான இலக்கை 19 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி அடித்து வெற்றி பெற்றுள்ளது.  கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியிலேயே தோல்வியடைந்ததால் டு பிளெசிஸ் ரசிகர்கள் மிகவும் கவலையில் உள்ளனர்.  ஒரு அணியாக அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடினால் எவ்வளவு பெரிய இலக்கையும் எட்டிவிடலாம் என்பதை சாதித்து காட்டியுள்ளது பஞ்சாப்.

 

மேலும் படிக்க | முதல் போட்டியில் தோற்றால் சென்னை சாம்பியன் ஆகாதா?!- உண்மை என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News