ஐபிஎல் மெகா ஏலம் அனைத்து அணிகளுக்கும் ஒரு புத்துயிர் அளித்துள்ளது என்றே சொல்லலாம். புதிதாக இணைந்துள்ள லக்னோ மற்றும் குஜராத் அணிகளும் தரமான வீரர்களை தேர்வு செய்துள்ளன. 10 அணிகள் என்பதால் இந்த முறை நட்சத்திர வீரர்கள் சிதறியுள்ளனர். இதுவே சில அணிகளுக்கு பலவீனமாகவும் உள்ளது. இந்நிலையில் ஐபிஎல்லில் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள 3 முக்கிய அணிகள் குறித்து பார்க்கலாம்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை சூப்பர் கிங்ஸ்


சென்னை அணியைப் பொறுத்த வரை கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. மொத்தமாக 8 ஆல் ரவுண்டர்களுடன் அணி களமிறங்குகிறது. டெவோன் கான்வே மற்றும் ருத்துராஜ் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க வாய்ப்புள்ளது. மொயின் அலி, அம்பத்தி ராயுடு மிடில் பேட்ஸ்மேனாகவும், ஜடேஜா, சிவம் துபே அதிரடியாக எந்த ஆர்டரிலும் இறக்கப்படலாம். பந்துவீச்சில் தீபக் சாஹர் மற்றும் பிராவோ கடந்த சீசன் போலவே பேட்ஸ்மேன்களை திணறடிப்பார்கள். சிஎஸ்கே மொத்தத்தில் தோனியின் தலைமையில் பலம் பொருந்திய அணியாகவே களமிறங்க உள்ளது. 



மேலும் படிக்க | 16 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு நோ-பால் கூட வீசாத இந்திய வீரர்


லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்


ஐபிஎல்லில் புதிதாக இந்த முறை இணைந்துள்ளது லக்னோ அணி. மற்ற அணிகளை ஒப்பிடுகையில் மிடில் பேட்ஸ்மேன்களை நுணுக்கமாக தேர்வு செய்துள்ளனர். சிஎஸ்கே போலவே லக்னோவும் 8 ஆல் ரவுண்டர்களை கொண்டுள்ளது. ஓபனிங் பேட்ஸ்மேன்களான கே.எல்.ராகுல் மற்றும் குயின்டன் டி காக் நல்ல பார்மில் உள்ளனர். மணிஷ் பாண்டே, குருணல் பாண்டியா உள்ளிட்டவர்கள் அதிரடி காட்ட தயாராக உள்ளனர்.  பந்துவீச்சை பொருத்த வரை அவர்கள் அவ்வளவு பலமாக இல்லை என்றே கணிக்கப்படுகிறது. அவேஷ் கானிடம் உறுதியாக பேக்-அப் இல்லை. ஹொல்டர், ரவி பிஷ்னாய், மார்க் வூட் ஆட்டத்தை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். எப்படியோ லக்னோ அணியின் ஆட்டக்காரர்கள் அதிரடியாக ரன்களை குவித்துவிட்டால் எதிரணியினரை சற்று ஆட்டிப்படைக்கலாம். 



மேலும் படிக்க | சச்சின் செஞ்சுரி அடிச்சாவே இந்தியா தோத்துடுமா? - உண்மை என்ன?


ராஜஸ்தான் ராயல்ஸ்


இந்த முறை ராஜஸ்தான் அணி நிலையான அணியை உருவாக்கியுள்ளது. முன்பு செய்த தவறு போல இல்லாமல், இந்த முறை மிடில் ஆர்டரை வலுவாக வைத்துள்ளனர். ஆனால் ஆல்ரவுண்டர்களைப் பொருத்தவரை 5 பேர் மட்டுமே உள்ளனர். இளம் வீரர்களான படிக்கல் மற்றும் யுஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களமிறக்கப்படலாம். சஞ்சு சாம்சன், கோஸ் பட்லர் லோயர் மிடில் ஆர்டரில் விளையடலாம். ரியான் பராக் மற்றும் ஜிம்மி நீஷம் போன்ற திடமான ஆட்டக்காரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை தவற விடமாட்டார்கள். ராஜஸ்தான் அணி சாஹல் மற்றும் அஷ்வின் போன்ற அனுபவம் மிக்க வீரர்களை கொண்டுள்ளது. 


இந்த மூன்று அணிகளுக்கும் கோப்பையை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கணிப்பு சரியானதா என்பதை இன்னும் சில தினங்களில் தெரிந்து கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR