IPL சரித்திரத்திலேயே மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட Chris Morris சாதனை
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிரிஸ் மோரிசுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக அவர் 16.25 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அவரது அடிப்படை தொகை 75 லட்சம் ரூபாய்.
சென்னை: தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிரிஸ் மோரிசுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக அவர் 16.25 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அவரது அடிப்படை தொகை 75 லட்சம் ரூபாய்.
கிரிஸ் மோரிசை வாங்குவதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. அவரது அடிப்படை தொகை 75 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ் மோரிஸுக்கு ஏன் இந்த மவுசு? ஐபிஎல் ஏல வரலாற்றிலேயே மிகவும் அதிக விலைக்கு அவர் ஏலம் எடுக்கப்பட்டதற்கான காரணம் என்ன?
Also Read | IPL Auction 2021: துவங்கியது IPL ஏலம், ஏலம் விடப்பட்ட முதல் வீரர் யார்?
தென்னாப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் ஒரு ஆல்ரவுண்டர். மோரிஸ் ஐபிஎல் கடந்த சீசனில் ஆர்.சி.பி.க்காக விளையாடினார். ஒன்பது போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மோரிஸின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் திறன்கள் விளையாட்டின் போக்கையே மாற்றக்கூடிய ஒன்று. 16.25 கோடி ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கிறிஸ் மோரிஸை வாங்கியது.
ஆனால் இன்று இந்த அளவுக்கு விலை போகும் அவரை கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விடுவித்தது. அது இப்போது கிறிஸ் மோரிசுக்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த ஆண்டு ஏலத்தில் 10 கோடி ரூபாய்க்கு கிறிஸ் மோரிஸை வாங்கியது, இப்போது அவர் 16.25 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார்.
கடந்த சீசனில் வெறும் 9 போட்டிகளில் பங்கேற்று 34 ரன்கள் மட்டுமே கிறிஸ் எடுத்தார். அதோடு, 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனவே ராயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அவரை விடுவித்தது.
Also Read | எந்த அணியிடம் எவ்வளவு பணம் உள்ளது. எத்தனை வீரர்களை ஏலம் எடுக்க முடியும்
மோரீஸ், சிறப்பாக பேட்டிங் செய்வதோடு மட்டுமல்லாமல், விக்கெட்களையும் துரிதமாக எடுப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. மோரிஸ் வேண்டும் என்று எல்லா அணிகளும் விரும்பின. அப்படிப்பட்ட அற்புதமான ஆல்-ரவுண்டர் மோரிஸ்.
இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் 164 இந்திய வீரர்கள் உட்பட 292 வீரர்கள் பங்கேற்றனர். இவர்களில் 125 பேர் வெளிநாட்டினர். மூன்று பேர் இணை வீரர்கள். எட்டு அணியின் உரிமையாளர்களால் அதிகபட்சம் 61 வீரர்களை ஏலம் எடுக்க முடியும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR