தள்ளிப்போகிறதா ஐபிஎல் ஏலம்? புதிய அணிகளின் நிலைமை என்ன?
ஐபிஎல் 2022 போட்டிகள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் 2022-ல் (IPL 2022)மொத்தமாக இந்த ஆண்டு 10 அணிகள் விளையாடவுள்ளன. எனவே, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிசிசிஐ இரண்டு புதிய அணிகளுக்கான ஏலத்தை நடத்தி முடித்து, லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய புதிய அணிகள் ஐபிஎல்-ல் இணைந்துள்ளது. அடுத்தகட்டமாக ஐபிஎல் 2022 மெகா ஏலம் அடுத்த மாதம் பிப்ரவரியில் நடைபெற உள்ளது. எனவே, மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 10 அணி உரிமையாளர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு அணியும் மொத்தம் ரூ. 90 கோடி வரை ஏலத்தில் பயன்படுத்தலாம்.
இதுவரை, அனைத்து பழைய 8 அணி உரிமையாளர்களும் மொத்தம் 27 வீரர்களை தங்கள் அணியில் தக்கவைத்துள்ளனர். இதில் 19 இந்திய வீரர்களும், 8 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர். அனைத்து பழைய அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை தங்கள் அணியில் தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டன. இதில் அதிகபட்சமாக 3 உள்நாட்டு வீரர்கள் மற்றும் அதிகபட்சமாக 2 வெளிநாட்டு வீரர்கள் இருக்கலாம். சமீபத்திய தகவல்களின்படி, ஐபிஎல் 2022 ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13-ல் பெங்களூரில் நடைபெற உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நடந்த மெகா ஏலம் போன்று இரண்டு நாட்களுக்கு ஏலம் நடைபெற உள்ளது. முன்னதாக ஜனவரி முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் மெகா ஏலம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது, இருப்பினும் தேதி பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி ஏலம் வேறு சில தேதிகளுக்கு தள்ளிவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு காரணமாக, இரண்டு புதிய அணிகளும் ஏலத்திற்கு முன்னதாக மற்ற அணிகளில் இருந்து வெளியிடப்பட்ட வீரர்களில் 3 பேரை தங்கள் அணியில் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான காலக்கெடு டிசம்பர் 25 என்று அறிவித்து இருந்தது. இருப்பினும், அகமதாபாத் அணியில் வீரர்களை தேர்வு செய்வதில் சில சிக்கல்கள் இருந்ததால், இந்த செயல்முறையை சரியான நேரத்தில் முடிக்க முடியவில்லை. விரைவில் இரண்டு புதிய அணிகளும் தங்களது வீரர்களை எடுக்கும் பட்சத்தில் ஏலம் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும். தற்போது பரவி வரும் ஒமிகிரான் வைரசும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
ALSO READ | புஜாரா, ரஹானேவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR