IPL: யார் இந்த விஷ்ணு வினோத்... 2189 நாள்களுக்கு பின் பேட்டிங் - ஆர்சிபி கழட்டி விட்ட இன்னொரு அதிரடி விரர்!
IPL 2023 Vishnu Vinod: குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சூர்யகுமார் யாதவ் சதம் அடித்து மிரட்டிய நிலையில், அவருக்கு துணையாக நின்று அதிரடியாக ரன்களை குவித்த மும்பை வீரர் விஷ்ணு வினோத் யார் என்று இதில் காணலாம்.
Mumbai Indians Player Vishnu Vinod: மும்பை - குஜராத் அணிகள் மோதும் இன்றைய போட்டியின் முதல் இன்னிங்ஸ் மிகவும் பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. மும்பையின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ், இன்று தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவுசெய்தார். பவர்பிளே முடிந்து முதல் பந்தில் ரஷித் கானிடம் வீழ்ந்த ரோஹித் சர்மாவுக்கு பின் சூர்யகுமார் களமிறங்கினார். அவர் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து தனது பதிவு செய்தார்.
ரோஹித் - இஷான் கிஷனின் சிறப்பான ஓப்பனிங்கும், சூர்யகுமார் யாதவின் அதிரடியும் மும்பை அணி 218 ரன்கள் வரை இழுத்துச்சென்றது. சூர்யகுமார் 103 ரன்களை 49 பந்துகளில் எடுத்திருந்தார். அதில் 6 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடங்கும். ரோஹித் 29, இஷான் 31, வதேரா 15, விஷ்ணு வினோத் 30 என மற்ற வீரர்களும் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்தனர். டிம் டேவிட் மட்டும் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதில், விஷ்ணு வினோத்தை தவிர்த்து மற்ற நால்வரின் விக்கெட்டையும் ரஷித் கான் கைப்பற்றினார். பொதுவாக 3ஆவது, 4ஆவது இடத்தில் வரும் கேம்ரூன் கிரீன் இம்முறை 7ஆவது வீரராக வந்தது குறிப்பிடத்தக்கது.
2189 நாள்கள் தவம்
சூர்யகுமார் சதம், ரோஹித்தின் அசத்தலான பவுர்பிளே பவுண்டரிகள், இஷானின் அச்சுறுத்தம் பேட்டிங் என அனைத்தையும் விட விஷ்ணு வினோத்தின் ஆட்டம் தான் இன்று பலரையும் கவர்ந்தது எனலாம். முகமது ஷமியின் ஓவரில் கிரீஸில் சற்று இட பக்கம் நகர்ந்து, ஆப் சைட்டில் அவர் அடித்த சிக்ஸர் தற்போது பலரின் பேவரைட் ஷாட்டாக மாறியிருக்கும்.
மேலும் படிக்க | T20 Records: 20 ஓவர் போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த புயல்வேக கிரிக்கெட்டர்கள்
அவரிடம் இருந்த முழு பவரும் அந்த ஒரே ஷாட்டில் தெரிந்தது எனலாம். பெங்களூரு உடனான கடைசி போட்டியில் பாப் டூ பிளேசிஸின் கேட்ச்சை பிடித்தவரும் இந்த விஷ்ணு தான். தற்போது 2189 நாள்களுக்கு பின் ஐபிஎல் தொடரில் பேட்டிங் செய்துள்ளார். அவர் 20 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரி என 30 ரன்களை குவித்தார்.
கேரளாவின் மற்றொரு ஹிட்டர்
கேரளாவின் பத்தனம்தெட்டாவை சேர்ந்தவரான இவர் சமீபத்தில் சையத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக பங்காற்றினார். மேலும், அணியின் எந்த வரிசையில் இறங்கினாலும் அதிரடியாக விளையாடக்கூடிய திறன் உடையாவர் விஷ்ணு வினோத். 29 வயதான இவர், கேரளா அணியின் துணை கேப்டனாக உள்ளார்.
பலரும் இவரை அறிமுக வீரர் என நினைத்திருந்தாலும் இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பாகவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 3 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆர்சிபியில் மூன்று போட்டி
2017ஆம் ஆண்டில் கேஎல் ராகுல் ஆர்சிபியில் இருந்தபோது, அவருக்கு ஏற்பட்ட தோள்பட்டை காயத்தால் தொடரில் இருந்து விலகினார். அப்போது, விஷ்ணு வினோத்தை ஆர்சிபி அணி மாற்று வீரராக கொண்டுவந்தது. 2017ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அவரை எந்த அணியும் எடுத்திருக்கவில்லை. ஆனால், அவர் 3 போட்டியில் மொத்தமாக 19 ரன்களையே எடுத்திருந்தார்.
ஏலத்தில் கடும் போட்டி
பின்னர், ஆர்சிபி அணி அவரை விடுவித்த பின் 2019ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்திலும் அவரை யாரும் வாங்கவில்லை. இதையடுத்து, 2021ஆம் ஆண்டில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்தும் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அடுத்து, 2022ஆம் ஆண்டு ஏலத்தில் ஹைதராபாத் - மும்பை அணிக்கும் இடையிலான போட்டியில் ஹைதராபாத் அவரை எடுத்தது.
20 லட்ச ரூபாய் அடிப்படையில் விலையில் இருந்து அவர் 50 லட்ச ரூபாய்க்கு ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார். ஆனால், அந்த தொடரிலும் அவர் விளையாடவில்லை. பின்னர், ஹைதராபாத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் மும்பை அணி அவரை சமீபத்தில் நடந்த மினி ஏலத்தில் அடிப்படைத் தொகையான ரூ. 20 லட்சம் கொடுத்து எடுத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரை சதம் கடந்து புதிய சாதனை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ