அகமதாபாத்: 208 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணியை நூர் அகமது, ரஷித் கான் ஆகியோர் துவம்சம் செய்தனர். செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2023 இன் 35-வது ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் ரோஹித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாஸ் வென்ற மும்பை அணி, குஜராத் அணியை பேட்டிங் செய்ய களமிறக்கியது. தொடக்க ஆட்டக்காரரான விருத்திமான் சாஹா முதல் பந்திலேயே 4 ரன்களுடன் சிக்ஸர் அடித்தார். ஹர்திக் பாண்ட்யாவை பியூஷ் சாவ்லா வெளியேற்றியதும் தமிழக வீரர் விஜய் சங்கர் விருத்திமான் சாஹாவுடன் ஜோடி சேர்ந்தார்.


சுப்மன் கில், விஜய் சங்கர் என இருவரும் அவுட்டாடன்போது, குஜராத் அணி, 13 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அபினவ் மனோகர், டேவிட் மில்லர் இணை, அபாரமாக விளையாடியது.


மேலும் படிக்க | ’கோல்டன் டக்’ விராட் கோலி! வெற்றி பெற்றாலும் 24 லட்ச ரூபாய் அபராதம் கட்டும் கோஹ்லி


டேவிட் மில்லர் 46 ரன்களை எடுத்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு குஜராத் அணி 207 ரன்களை குவித்தது. மும்பை அணி தரப்பில் பியூஸ் சாவ்லா 2 விக்கெட்டுகளையும், அர்ஜுன் டென்டுல்கர், குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ரிலே மெரிடித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுளை வீழ்த்தினர்.


குஜராத் அணி நிர்ணயித்த 208 ரன்கள் என்ற பெரிய இலக்கை பெற மும்பை அணிக்கு நல்ல தொடக்கம் தேவைப்பட்டாலும், முகமது ஷமி, கேப்டன் ஹர்திக் பாண்டியா என குஜராத் அணி தொடக்கத்திலேயே தங்கள் பந்துவீச்சை அதகளப்படுத்த, தனது முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா வெளியேறினார்.


மேலும் படிக்க | WTC டெஸ்ட் சாம்பியன் இறுதி போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு! துணை கேப்டன் இல்லை


 


முகமது ஷமி தனது முதல் இரண்டு ஓவர்களில் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார், இது மும்பை அணியின் பவர்பிளேயில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. 6 ஓவர்கள் முடிவில் ரோஹித் சர்மாவின் மும்பை அணி, 1 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.


ரஷித் கான் 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை எடுத்தார், நூர் 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்தார் மும்பை அணியின் நேஹால் வதேராவின் பேட்டிங்கில், மும்பை அணி 150 ரன்களைக் கடந்தது. அவர் அவுட்டானதும், மும்பை அணியின் தோல்வி உறுதியானது. 


இன்னிங்ஸ் முடிவில் பவர் ஹிட்டிங் செய்த அபினவ் மனோகர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். குஜராத் டைட்டன்ஸ் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஐபில் 2023 புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது, மும்பை அணி 7 ஆட்டங்களில் 4 தோல்வியுடன், புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டது.


மேலும் படிக்க | WTC 2023: இங்கிலாந்தில் ஐசிசி உலகக்கோப்பையை வெல்லும் இந்திய அணியின் பேட்டர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ