WTC டெஸ்ட் சாம்பியன் இறுதி போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு! துணை கேப்டன் இல்லை

Team India For ICCI Championship: ஐசிசிஐ டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. அஜிங்க்யா ரஹானே மீண்டும் வருகிறார், ரோஹித் ஷர்மா கேப்டன், ஆனால் துணை கேப்டன் இல்லை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 25, 2023, 12:51 PM IST
  • உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அணியை பிசிசிஐ அறிவித்தது’
  • அஜிங்க்யா ரஹானே மீண்டும் வருகிறார்
  • விக்கெட் கீப்பரைத் தவிர 6 பேட்ஸ்மேன்கள் அணியில் சேர்ப்பு
WTC டெஸ்ட் சாம்பியன் இறுதி போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு! துணை கேப்டன் இல்லை title=

ICCI Championship:  ஜூன் 7, 2023 முதல் இங்கிலாந்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (Board of Control for Cricket in India (BCCI)) அறிவித்துள்ளது.

விக்கெட் கீப்பரைத் தவிர 6 பேட்ஸ்மேன்களை அணியில் சேர்த்துள்ள பிசிசிஐ, பந்துவீச்சு பிரிவில், மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களை சேர்த்துள்ளது. இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கேஎஸ் பாரத் நியமிக்கப்பட்டுள்ளார்.  கடைசி பேட்ஸ்மேன் இடத்தை அஜிங்க்யா ரஹானே மற்றும் கே.எல் ராகுல் கைப்பற்றலாம்.

கேப்டன் ரோஹித் ஷர்மா

ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார், மேலும் அணிக்கு துணை கேப்டன் நியமிக்கப்படவில்லை.ரோஹித் ஷர்மா, அணியை வழிநடத்தும் நிலையில், ஷுப்மான் கில், சேட்டேஷ்வர் புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்ததாக பேட்டிங்கைத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

அணியில் இடம் பெற்றுள்ள மூன்று சுழற்பந்து வீச்சாளர்களில், அக்சர் படேலை விட ரவி அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அங்கீகாரம் பெற வாய்ப்புள்ளது. வேகப்பந்து வீச்சில் சஹர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

மேலும் படிக்க | ஃபார்மில் இல்லை! ஆனால் ஐபிஎல் 2023 போட்டியில் மீண்டு வந்து கலக்கும் கிரிக்கெட்டர்கள்

ஆச்சரியம் அளிக்கும் அஜிங்க்யா ரஹானே
அஜிங்க்யா ரஹானே இந்த அணியில் இடம் பெற்றிருப்பது அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். முன்னாள் இந்திய டெஸ்ட் துணை கேப்டன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் கடைசி டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. இருப்பினும், தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக்கில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக விளையாடும் ரஹானே, இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு அரைசதம் அடித்துள்ளார். இந்த சீசனில் பேட்ஸ்மேன் 199.04 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 52.25 சராசரியுடன் 204 ரன்கள் எடுத்துள்ளார்.

WTC இறுதிப் போட்டிக்கான இந்திய அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே எல் ராகுல், கேஎஸ் பாரத் (Wk), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.

மேலும் படிக்க | ’கோல்டன் டக்’ விராட் கோலி! வெற்றி பெற்றாலும் 24 லட்ச ரூபாய் அபராதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News