ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா மார்ச் 31 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்க இருக்கும் நிலையில், ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றிய தன்னுடைய அபிமானத்தை தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணியின் துருப்புச் சீட்டாக இந்திய அணியின் ஆல்ரவுண்டரும், சிஎஸ்கேவின் நம்பிக்கை நட்சிரமாக இருக்கும் ரவீந்திர ஜடேஜா இருப்பார் என அவர் கூறியுள்ளார். வெளிநாட்டு வீரர்களை பொறுத்தவரை டெவோன் கான்வே, பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயீன் அலி, மகிஷ் தீக்ஷனா ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்டார்ஸ்போர்ஸ் நிறுவனத்துக்கு ஹர்பஜன் சிங் அளித்திருக்கும் பேட்டியில், ஜடேஜாவைப் போல் சிறந்த ஆல்ரவுண்டர் உலக கிரிக்கெட்டில் இப்போது இல்லை. அவர் சிறந்த பேட்ஸ்மேனாகவும், பந்துவீச்சாளராகவும் இருக்கிறார். பீல்டிங்கிலும் அசத்தும் அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் நிச்சயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துருப்புச் சீட்டாக இருப்பார் என ஆணித்தரமாக சொல்லுவேன். சிஎஸ்கே பிளேயிங் லெவனை பொறுத்தவரை வெளிநாட்டு பிளேயர்கள் இடத்தில் இலங்கை வீரர் மகேஷ் தீக்ஷனாவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.


மேலும் படிக்க | INDvsAUS: 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி பைனலில் மோத இருக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா..!


பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, டெவோன் கான்வே மற்றும் மகேஷ் தீக்ஷனா ஆகியோர் இருப்பார்கள் என கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்போது சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதில் தோனி, அம்பத்தி ராயுடு, அஜிங்கியா ரஹானே, தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட பிளேயர்கள் கலந்து கொண்டுள்ளனர். மார்ச் 31 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கும் முதல் ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை சிஎஸ்கே எதிர்கொள்கிறது. இதனையொட்டி டிக்கெட்டை வாங்க ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆர்வம் இருக்கிறது. ரசிகர்களுக்கு டிக்கெட் கொடுக்க சிறப்பு போட்டிகளை நடத்தவும் குஜராத் டைட்டன்ஸ் திட்டமிட்டுள்ளது.


இந்த ஐபிஎல் 2023 தொடரை பொறுத்த வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தும் தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம். 40 வயதைக் கடந்துவிட்டதால், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவில் இருக்கிறார் அவர். அதனால், இந்த தொடரை வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறார். ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


மேலும் படிக்க | IPL 2023: ரெய்னாவின் ஆல்டைம் சிறந்த பந்துவீச்சாளர் இவர் தான்...! சிஎஸ்கே வீரர் இல்லை


மேலும் படிக்க | ஐபிஎல் 2023: டிக்கெட் விற்பனை தொடங்கியது..! சிஎஸ்கே - குஜராத் மேட்ச் டிக்கெட் வாங்குவது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ