IPL 2023: ரெய்னாவின் ஆல்டைம் சிறந்த பந்துவீச்சாளர் இவர் தான்...! சிஎஸ்கே வீரர் இல்லை

ஐபிஎல் 2023 தொடர் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் ஜியோ சினிமாவில் பேசிய சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரில் ஆல்டைம் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் மலிங்கா என கூறியுள்ளார். பும்ராவின் வளர்ச்சியில் மலிங்காவின் பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 22, 2023, 01:24 PM IST
IPL 2023: ரெய்னாவின் ஆல்டைம் சிறந்த பந்துவீச்சாளர் இவர் தான்...! சிஎஸ்கே வீரர் இல்லை title=

ஐபிஎல் 2023 திருவிழா இப்போதே களைகட்ட தொடங்கியுள்ளது. ஜியோ சினிமா ஐபிஎல் போட்டிகளை மிக துல்லியமாக ஒளிபரப்ப தயாராக இருப்பதுடன், முன்னாள் கிரிக்கெட் வீரர்களுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வருகிறது. இதில் லேட்டஸ்டாக சுரேஷ் ரெய்னா, ஆர்பி சிங், பிரக்யான் ஓஜா, பர்தீவ் படேல் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ரெய்னாவிடம் ஐபிஎல் தொடரில் ஆல்டைம் சிறந்த பந்துவீச்சாளர் யார்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

மேலும் படிக்க | IPL 2023: தோனியின் சரவெடி.. சேப்பாக்கத்தில் தொலைந்த பந்துகள்..! சம்பவம் இருக்கு

அவரிடம் மலிங்கா, பும்ரா, சுனில் நரைன், ரஷித்கான், டிஜே பிராவோ ஆகியோரின் பெயர்கள் ஆப்சன்களாக கொடுக்கப்பட்டன. டிஜே பிரோவோவை ரெய்னா தேர்ந்தெடுப்பார் என யூகிக்கப்பட்டபோது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய லசித் மலிங்காவை தன்னுடைய ஆல்டைம் பேவரைட் பவுலராக தேர்ந்தெடுத்தார். அது குறித்து ரெய்னாவிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், லசித் மலிங்கா ஐபிஎல் மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் அளப்பரிய பங்களிப்பை செய்திருக்கிறார். அவருடைய ஆக்ஷன் மற்றும் வீசும் துல்லியமான வேகம் ஆகியவை பேட்ஸ்மேன்களுக்கு பயத்தை ஏற்படுத்தும். அதனால் தான் ஐபிஎல் மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டிலும் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில் அவர் இருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் விளையாடியபோது மிகச்சிறப்பாக செயல்பட்டார். பும்ராவின் பந்துவீச்சு வளர்ச்சியில் மலிங்காவின் பங்கும் இருக்கிறது. ஐபிஎல் தொடரில் டிஜே பிராவோவுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் மலிங்கா இருக்கிறார். இலங்கை அணி 2014 ஆம் ஆண்டு அவரது தலைமையில் 20 ஓவர் உலக கோப்பையை வென்றிருக்கிறது என மலிங்காவின் சாதனைகளை ரெய்னா பட்டியலிட்டார். அவரின் இந்த தேர்வுக்கு ஆர்பி சிங், ராபின் உத்தப்பா, பார்தீவ் படேல் ஆகியோர் சரியான தேர்வு என ஒப்புக் கொண்டனர். ஆனால் பிரக்யான் ஓஜா மட்டும் ஹர்பஜனை தன்னுடைய ஆல்டைம் சிறந்த பந்துவீச்சாளராக தேர்வு செய்தார். 

ஐபிஎல் 2023 தொடர் மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் களம் காண இருக்கின்றன. தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் களமிறங்கும் கடைசி ஐபிஎல் தொடராக இது இருக்கும் என்பதால், அதிரடியான ஆட்டத்தை சிஎஸ்கே வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ரெய்னாவும், அப்படியான ஆட்டத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் இந்த பேட்டியில் கூறியுள்ளார். 

மேலும் படிக்க | IPL2023: தோனி ஹூக்கா மிகவும் விரும்பி பிடிப்பார் - ஜார்ஜ் பெய்லி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News