சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இந்த சீசனில் மன நிறைவாக இருக்கும் ஒரு சம்பவம் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் அரங்கேறியிருக்கிறது. அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ஹென்றி கிளாசன், அதிரடியாக விளையாடி ஐபிஎல் தொடரில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்திருக்கிறார். பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட சன்ரைசர்ஸ் அணிர, சம்பிரதாயத்துக்காகவே ஆர்சிபி அணியுடனான போட்டியில் ஆடியது. இந்த தொடரில் அந்த அணிக்காக தொடர்ந்து நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடி வரும் கிளாசன், இந்த போட்டியிலும் நம்பிக்கையளிக்கும் வகையிலேயே விளையாடினார். 51 பந்துகளை எதிர்கொண்ட அவர் 104 ரன்கள் குவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆர்சிபி - சன்ரைசர்ஸ் மோதல்


ஹைதராபாத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் 65வது லீக் போட்டியில் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு இருக்கும் என்ற கட்டாயத்திலும், இழப்பதற்கு எதுவுமில்லை என சன்ரசைர்ஸ் அணியும் களமிறங்கின. டாஸ் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி பவுலிங் தேர்வு செய்ய சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் இறங்கியது. வழக்கம்போல அந்த அணியின் தொடக்க வீரர்கள் சோபிக்க தவறினார். அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தனர்.


மேலும் படிக்க | IPL Records: ஐபிஎல் வரலாற்றில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பெளலர்கள்


ஹென்றி கிளாசன் அபார சதம்



இதனால் சன்ரைசர்ஸ் அணி சிக்கலில் மாட்டிக் கொண்டது. அப்போது, மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஹென்றி கிளாசன் எதனைப் பற்றியும் கவலைப் படாமல் ஆர்சிபி அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். பந்துகளை நாலாபுறமும் சிதறடித்த அவர், ஐபில் தொடரில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். 51 பந்துகளில் 104 ரன்கள் விளாசிய அவர், 6 மெகா சிக்சர்களையும், 8 பவுண்டரிகளையும் வெளுத்து தள்ளினார். அவரின் அதிரடி ஆட்டத்தால் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. கிளாசன் மட்டும் ஆடவில்லை என்றால் சன்ரைசர்ஸ் அணி இந்த மேட்சிலும் பரிதாபமான ஸ்கோரையே எடுத்திருக்கும்.


முகமது சிராஜ் கலக்கல்


பந்துவீச்சில் ஆர்சிபி அணி சொதப்பினாலும் சிராஜ் கலக்கினார். அவர் 4 ஓவர்கள் வீசி வெறும் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். கட்டுக்கோப்பாகவும், துல்லியமாகவும் வீசியதால் அவரின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் தடுமாறியது சன்ரைசர்ஸ் அணி. கரண் சர்மா 3 ஓவர்களில் 45 ரன்களை விட்டுக்கொடுத்தார். விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை. அற்புதமாக பந்துவீசிய பிரேஸ்வெல் 13 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆர்சிபி அணி 2வது பேட்டிங்கை ஆடியது.   


மேலும் படிக்க | PBKS vs DC: 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி; பஞ்சாப் பிளே ஆஃப் கனவு காலி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ