கே.எல்.ராகுல் காயம் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லக்னோ மைதானத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ஆர்சிபி அணியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி எதிர்கொண்டது. இந்த போட்டியின் 2வது ஓவரில் பவுண்டரிக்கு சென்ற பந்து பிடிக்க ஓடிய கே.எல்.ராகுல் கீழே விழுந்தபோது காயம் ஏற்பட்டது. மைதானத்திலேயே வலியால் அவர் துடித்தார். உடனடியாக போட்டியில் இருந்து வெளியேறிய அவருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு அவர் பீல்டிங்கிற்கு வரவில்லை.


காயமுடன் பேட்டிங் 


தொடைப்பகுதி மற்றும் இடுப்பு பகுதியில் வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டதால் அவரால் எழுந்து சரியாக நடக்க முடியவில்லை. இருப்பினும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழந்த பிறகு வேறு வழியின்றி அவர் பேட்டிங் செய்ய வந்தார். அப்போதும் ரன் ஓட முடியவில்லை. இதனை தொடர்ந்து கேஎல் ராகுல் உடனடியாக ஸ்கேன் செய்ய அழைத்துச் செல்லப்பட்டார். இந்த முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், கே.எல்.ராகுலின் காயம் குறித்த பொறுப்பை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் இருந்து பிசிசிஐ எடுத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க | IPL 2023: லக்னோவை வேட்டையாடுமா சிஎஸ்கே... பிளேயிங் லெவனில் மாற்றம் தோனி - பிளான் என்ன?


பிசிசிஐ முடிவு 


காயத்தின் தன்மை மற்றும் அதில் இருந்து அவர் மீளும் காலம் ஆகியவற்றை பொறுத்து ஐபிஎல் தொடரில் அவர் விளையாட முடியுமா? இல்லையா? என்பதை பிசிசிஐ முடிவெடுக்கும். சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி உள்ளிட்ட இந்திய அணிக்கான முக்கியமான தொடர்கள் இருப்பதால் அதனையும் கருத்தில் கொண்டு கே.எல்.ராகுல் ஐபிஎல் தொடரில் இனி விளையாட அனுமதிக்கப்படுவது குறித்து பிசிசிஐ முடிவெடுக்கும். வருகிற ஜூன் 7 ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணியில் கேஎல் ராகுல் இருக்கிறார். இந்த போட்டிக்கு சரியாக ஒரு மாதம் மட்டுமே உள்ளதால் இனி கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரில் தொடர்வது சந்தேகம் தான் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.


லக்னோவுக்கு புதிய கேப்டன்


பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுல் இல்லாதபோது கேப்டனாக க்ருனால் பாண்டியா செயல்பட்டார். ஐபிஎல்-இல் 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனுபவம் கொண்டவராகவும் இருக்கும் அவர், இனி வரும் போட்டிகளின் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஞ்சிக்கோப்பை உள்ளிட்ட உள்ளூர் தொடர்களில் குருணால் பாண்டியா கேப்டனாக இருந்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியிலும் அவரே கேப்டனாகவும் செயல்பட இருக்கிறார். அவரது தலைமையில் எல்எஸ்ஜி எப்படி விளையாடப்போகிறது? என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். 


மேலும் படிக்க | IPL 2023: கோலி கம்பீரிடம் கூறியது என்ன? களத்தில் கூடவே இருந்தவர் சொன்னது இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ