இர்பான் பதான் நம்பிக்கை 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் நடத்தும் 20 ஓவர் உலக கோப்பை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் விளையாடும் இந்திய அணியை இப்போது பிசிசிஐ தயார் செய்து கொண்டிருக்கிறது. விக்கெட் கீப்பருக்கான இடத்துக்கு இந்திய அணியில் போட்டி நிலவுகிறது. கே.எல்.ராகுல், ரிஷப் பன்ட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் முன்னணியில் இருக்கும் நிலையில் இந்த இடத்துக்கு ஜிதேஷ் சர்மாவும் புதிதாக இணைந்துள்ளார். அவர் பஞ்சாப் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவரை விக்கெட் கீப்பர் இடத்துக்கு தேர்ந்தெடுக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | தோனி கோபப்படக்கூடிய ஒரே விஷயம் இதுதான் - மேத்யூ ஹைடன்


ஜிதேஷ் சர்மாவின் சிறப்பான ஆட்டம்


ஜிதேஷ் சர்மா குறித்து இர்பான் பதான் பேசும்போது, " அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்துக்கு தான் ஜிதேஷ் சர்மாவை தேர்ந்தெடுப்பேன். சூர்யகுமார் யாதவுக்கு இணையான திறமையை கொண்டிருப்பவர் ஜிதேஷ். அவரால் புதுமையான ஷாட்டுகளை எல்லாம் விளையாட முடியும். பஞ்சாப் அணிக்காக அவர் சிறப்பாக விளையாடி இருக்கிறார். வேகம் மற்றும் சுழற்பந்துவீச்சாளர்களை அசால்டாக எதிர்கொள்ளக் கூடிய திறமை அவரிடம் இருப்பதால், ஜிதேஷ் சர்மாவை இந்திய அணியில் தேர்ந்தெடுக்கலாம்" என கூறியுள்ளார்.


பிசிசிஐ பிளான் என்ன?


பிசிசிஐ பொறுத்தவரையில் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் வாய்ப்பு கொடுப்பதில்லை. 2022 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பைக்குப் பிறகு இருவரும் இந்திய அணிக்காக எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அவர்கள் விளையாடவில்லை. ஆனால், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு அடுத்த 20 ஓவர் உலக கோப்பை விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், பிசிசிஐ இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற முடிவில் இருக்கிறது. இருப்பினும் ஐபிஎல் போட்டி முடிந்த பிறகே இந்திய அணியில் யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு என்பது தெளிவாக தெரியும். 


மேலும் படிக்க | மும்பை ஸ்கெட்சில் சிக்காத முகமது ஷமி, குல்தீப், மிட்செல் மார்ஷ்...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ