மும்பை இந்தியன்ஸ் ஸ்கெட்ச்
ஐபிஎல் 2024 ஏலத்துக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், பரஸ்பர டிரேடிங் மூலம் ஐபிஎல் அணிகள் வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அதற்கு ஐபிஎல் நிர்வாகம் கொடுத்திருக்கும் காலவகாசம் டிசம்பர் 12 ஆம் தேதியான இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதற்குள் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருக்கும் குல்தீப் மற்றும் மிட்செல் மார்ஷை மும்பை அணி வாங்க முயற்சித்த தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு டெல்லி அணி ஒப்புக்கொள்ளாததால், மும்பை பல்தான்ஸின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது.
ஹர்திக் பாண்டியா ரிட்டன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தைப் பொறுத்தவரை கடந்த சில மாதங்களாகவே தங்களுக்கு வேண்டிய பிளேயர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு வழிகளில் தூதுவிட்டிருக்கிறது. அந்த தூதில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மட்டுமே சிக்கினார். மற்ற பிளேயர்கள் யாரும் மும்பை எதிர்பார்த்த வலைக்குள் விழவில்லை. குஜராத் அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்திய அணியின் நட்சத்திர பவுலரான முகமது ஷமிக்கும் மும்பை தரப்பில் இருந்து ஆஃபர் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் ஏதோ சில காரணங்களால் இந்த ஒப்பந்தம் கூடிவரவில்லை.
மேலும் படிக்க | IPL 2024 Players Auction: எந்தெந்த பிளேயருக்கு எவ்வளவு விலை..! - முழு விவரம்
மிஸ்ஸான குல்தீப் யாதவ் ஸ்கெட்ச்
இதேபோல் தான் குல்தீப் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரையும் வர்த்தகம் செய்ய மும்பை இந்தியன்ஸ் முயன்றிருக்கிறது. இதற்கு காரணம் அணியில் இப்போது சுழற்பந்துவீச்சுக்கு பியூஷ் சாவ்லா மட்டுமே இருக்கிறார். அவருக்கு பக்கபலமாக மற்றொரு தரமான பந்துவீச்சாளர் தேவை என நினைக்கிறது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம். இளம் வீரரான ஹிருத்திக் ஷோகீன் இப்போது அணியில் இருந்து விடுக்கப்பட்டிருப்பதால், அந்த இடத்துக்கு குல்தீப் யாதவை கொண்டு வரலாம் என ஸ்கெட்ச் போட்டிருக்கிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் நிராகரிப்பு
இம்முறை முறைப்படி டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்வாகத்திடம் தெரியப்படுத்தி குல்தீப்பை வர்த்தகம் செய்ய முயன்றிருக்கிறது மும்பை இந்தியன்ஸ். ஆனால் டெல்லி அணி இதற்கு கிரீன் சிக்னல் கொடுக்கவில்லை. அதேபோல் மிட்செல் மார்ஷூக்கும் மும்பை இந்தியன்ஸ் கொடுத்த ஆஃபரை டெல்லி கேப்பிட்டல்ஸ் நிராகரித்திருக்கிறது.
குல்தீப் யாதவைப் பொறுத்தவரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பன்டின் நெருங்கிய நண்பர். கடந்த ஐபிஎல் ஏலங்களின்போது கொல்கத்தா அணி திடீரென அவரை விடுவித்தபோது ரிஷப் பன்டின் பரிந்துரையின் பேரில் குல்தீப் டெல்லி அணிக்காக வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ரிங்கு சிங்: இந்திய அணியின் அடுத்த யுவராஜ் சிங்கா? - கவாஸ்கர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ