உலகக்கோப்பையில் இந்த வேகப்பந்துவீச்சாளர் பங்கேற்பது சந்தேகம்! இந்திய அணிக்கு பின்னடைவு
ஆஸ்திரேலியாவில் விரைவில் தொடங்க இருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பங்கேற்பது கடினம் என கூறப்படுகிறது
இந்திய அணி அடுத்ததாக ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இருக்கிறது. 20 ஓவர் போட்டியாக நடைபெறும் ஆசியக்கோப்பை போட்டி ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பங்கேற்க இருக்கிறது. ஓய்வில் இருந்த மூத்த வீரர்களான விராட் கோலி உள்ளிட்டோர் அணிக்கு திரும்பியுள்ளனர். அவர்களின் வருகை இந்திய அணிக்கு பக்கபலமாக இருந்தாலும், காயம் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
முதுகுப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக சிகிச்சை பெற்றும் வரும் அவர், தேசிய கிரிக்கெட் அகாடமியின் கண்காணிப்பிலும் வைக்கப்பட்டுள்ளார். அவரின் விலகல் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது. கடந்த 20 ஓவர் உலகக்கோப்பையில் இந்திய அணியை வீழ்த்திய பாகிஸ்தான் அணி, அதன்பிறகு இப்போது தான் நேருக்கு நேர் சந்திக்க இருக்கிறது.
இதனால் இவ்விரு அணிகளும் மோதும் இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரை இந்தப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி, உலகக்கோப்பை தோல்விக்கு பழிக்குப் பழி தீர்க்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்கு விராட் கோலி உள்ளிட்டோர் சிறப்பான ஆட்டத்தை கட்டாயம் வெளிப்படுத்தியாக வேண்டும். அதேநேரத்தில் காயம் காரணமாக பும்ரா விலகியிருப்பது பாகிஸ்தான் போன்ற பெரிய போட்டிகளில் பின்னடைவாகவும் அமையலாம் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் மற்ற இளம் வீரர்கள் பும்ராவின் இடத்தை நிரப்புவார்கள் என கிரிக்கெட் வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | இந்திய கிரிக்கெட் முகத்தை மாற்றிய கங்குலி மீண்டும் கேப்டன் - குஷியில் தாதா ரசிகர்கள்
ஆசியக்கோப்பையில் விலகினாலும் 20 ஓவர் உலகக்கோப்பைக்குள் பும்ரா தயாராகிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் அதற்குள் குணமடைவது கேள்விக்குறி என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இது பும்ராவுக்கே அதிர்ச்சியாக இருக்கும். இருப்பினும் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு உலகக்கோப்பைக்கு முன்பாக காயத்தில் இருந்து குணமடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் அவர்.
மேலும் படிக்க | பிசிசிஐ போட்ட அதிரடி உத்தரவு: ஆடிபோன ஐபிஎல் அணிகள் - தோனிக்கும் சிக்கல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ