பிசிசிஐ போட்ட அதிரடி உத்தரவு: ஆடிபோன ஐபிஎல் அணிகள் - தோனிக்கும் சிக்கல்

பிசிசிஐ உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்ட பின்னரே  வெளிநாட்டு 20 ஓவர் லீக்குகளில் பங்கேற்க வேண்டும் என இந்திய வீரர்களுக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 13, 2022, 01:12 PM IST
  • பிசிசிஐ போட்ட அதிரடி உத்தரவு
  • ஐபிஎல் அணிகளுக்கு கடிவாளம்
  • தோனிக்கும் புதிய சிக்கல்
பிசிசிஐ போட்ட அதிரடி உத்தரவு: ஆடிபோன ஐபிஎல் அணிகள் - தோனிக்கும் சிக்கல் title=

ஐபிஎல் போட்டியின் பிரபலத்துக்குப் பிறகு உலகளவில் பல்வேறு நாடுகளில் 20 ஓவர் கிரிக்கெட் லீக்குகள் நடத்தப்படுகின்றன. ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் 20 ஓவர் தொடர், வெஸ்ட் இண்டீஸில் கரிபீயின் பிரீமியர் லீக் மற்றும் பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலும் 20 ஓவர் லீக்குகள் நடத்தப்படுகின்றன. புதிதாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் 20 ஓவர் கிரிக்கெட் லீக்குகள் நடத்தப்படுகின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் 20 ஓவர் லீக்குகளில் கலந்து கொள்ளும் அணிகளை, இந்தியாவில் இருக்கும் ஐபிஎல் அணிகளே வாங்கியிருக்கின்றன.

 அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் தென் ஆப்பிரிக்காவில் நடக்க உள்ள 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான 6 அணிகளில் ஜோகனஸ்பர்க் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளது. கேப்டவுன் அணியை மும்பை இந்தியன்சும், டர்பன் அணியை லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும், செயின்ட் ஜார்ஜ் பார்க் அணியை ஐதராபாத் சன்ரைசர்சும், பார்ல் அணியை ராஜஸ்தான் ராயல்சுக்கும், பிரிட்டோரியா அணியை டெல்லி கேப்பிட்டல்சும் வாங்கியுள்ளது. இந்த தொடர்களில் விளையாடும் வீரர்கள் மற்றும் ஊழியர்களை ஐபிஎல் அணிக்காக தேர்வு செய்யப்பட்டவர்களைக் கொண்டு பயன்படுத்திக் கொள்ள ஐபிஎல் அணிகள் திட்டம்போட்டன. இந்த முடிவு பிசிசிஐ-ன் காதுகளுக்கும் சென்றதும், ஐபிஎல் அணிகளின் இந்த முடிவுக்கு எதிராக அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க | ’நியூசிலாந்து கிரிக்கெட்டில் நிறவெறி கொடுமை’ ராஸ் டெய்லர் பரபரப்பு குற்றச்சாட்டு

அந்த உத்தரவில் இந்தியாவில் விளையாடும் எந்தவொரு இந்திய மற்றும் உள்ளூர் வீரரும் ஓய்வு பெறுவதற்கு முன்னர் வெளிநாட்டு கிரிக்கெட் லீக்குகளில் பங்கேற்க கூடாது எனத் தெரிவித்துள்ளது. பிசிசிஐ உடனான அனைத்து விதமான ஒப்பந்தங்களையும் முடித்துக் கொண்ட பின்னரே வெளிநாட்டு கிரிக்கெட் லீக்குகளில் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தென்னாப்பிரிக்கா லீக்குக்கு பொறுப்பாளராக செயல்பட இருந்த தோனிக்கும் இந்த உத்தரவு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவர் இன்னும் இந்திய கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற வில்லை. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஒப்பந்தத்தில் அவர் இன்னும் நீடிக்கிறார். பிசிசிஐ போட்ட இந்த உத்தரவு வெளிநாட்டு கிரிக்கெட் லீக்குகளில் அணிகளை வாங்கிய ஐபிஎல் அணிகளுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | இந்திய கிரிக்கெட் முகத்தை மாற்றிய கங்குலி மீண்டும் கேப்டன் - குஷியில் தாதா ரசிகர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News