ஐபிஎல் தொடர் வருகிற 26ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இதற்கான  முன் தயாரிப்புப் பணிகளில் அணிகள் தீவிரம் காட்டிவருகின்றன. கடந்த சீசனில் எட்டு அணிகள் மட்டும் பங்கேற்ற நிலையில், இம்முறை குஜராத் மற்றும் லக்னோ என கூடுதலாக இரு அணிகள் களம் இறங்கவுள்ளன. பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் தற்போது லக்னோ அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்து காயம் காரணமாகப் பாதியில் வெளியேறிய ஸ்ரேயஸ் ஐயர் இந்தத் தடவை கொல்கத்தா அணிக்குத் தலைமை ஏற்கவுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

                                                                               


மேலும் படிக்க | வெறித்தனப் பயிற்சி- ஸ்டெம்பை இரண்டாக உடைத்த நடராஜன்: வைரல் வீடியோ!


இந்த நிலையில் இரு கேப்டன்களும் தங்களது அணிகள் குறித்துக் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில், ராகுல் குறித்துக் கூறியுள்ள ஸ்ரேயஸ் ஐயர், ராகுல் தனது பேவரைட் கேப்டன் எனப் புகழ்ந்துள்ளார். சிறந்த வீரரான ராகுல் களத்திலும் டீம் மீட்டிங்கிலும் சக வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக நடந்துகொள்வார் எனத் தெரிவித்துள்ள ஸ்ரேயஸ் ஐயர், அவரது தலைமையின் கீழ் விளையாடுவது தனக்கு மகிழ்ச்சியான ஒன்று எனவும் தெரிவித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ராகுல் ஃப்ளிக் ஷாட்டில் சிக்ஸ் அடிப்பதை முதன்முதலாகக் கண்டபோது தான் மிரண்டுபோனதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


                                                                       
அதேபோல ஸ்ரேயஸ் ஐயர் குறித்தும் கே.எல்.ராகுல் மனம் திறந்து பாராட்டியுள்ளார். ஸ்பின்னர்களுக்கு எதிராக ஸ்ரேயஸ் ஐயர் சிறப்பாக விளையாடுவதாகவும் உயரமாக உள்ள அவரிடம் நின்ற இடத்திலிருந்தே மைதானத்துக்கு வெளியே பந்துகளை சிக்ஸருக்குத் தூக்கும் வல்லமை உள்ளதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார். தனது அணி பந்துவீச்சாளர்களை ஸ்ரேயஸ் ஐயர் என்ன செய்யக் காத்திருக்கிறாரோ என தான் சற்று அச்சப்படுவதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார்.


சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து நல்ல ஃபார்மில் இருந்துவரும் ஸ்ரேயஸ் ஐயர், இந்த ஐபிஎல் தொடரிலும் கலக்குவார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | ரெய்னாவுக்குத் திடீர் விருது: ஏன் தெரியுமா?!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR