பாகிஸ்தான் வீரரின் மகளை கொஞ்சும் இந்திய வீரர்கள்! வைரலாகும் வீடியோ!
பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மரூப்பின் மகள் மீது இந்திய மகளிர் கிரிக்கெட் வீரர்கள் தங்களது அன்பு மழையை பொழிந்தனர்.
ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2022 போட்டியை வெற்றியுடன் தொடங்கி உள்ளது இந்திய அணி. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. நியூசிலாந்தில் உள்ள பே ஓவல், மவுண்ட் மவுங்கானுய் மைதானத்தில் இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு, பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மரூப்பின் ஆறு மாத மகள் பாத்திமாவுடன் இந்திய அணி வீரர்கள் தங்களது அன்பை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் படிக்க | ஐபில்2022; முழு அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ - சென்னை, மும்பை மோதும் ஆட்டங்கள்
இந்தியாவும் பாகிஸ்தானும் நீண்டகாலமாக பல பிரச்சனைகளை கொண்டிருக்கின்றன. 1974, 1965 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் இரு நாட்டிற்கும் போர் நடந்தது. இரு நாடுகளுக்கிடையேயான பகைமை விளையாட்டிலும் அடிக்கடி நடக்கும். தற்போது இரு நாடுகளும் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை. ஐசிசி நடத்தும் சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றன. ஆனால் இரு நாடுகளிலும் கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டாக இருப்பதால், 'ஜென்டில்மேன் கேம்' என்று அழைக்கப்படும் இந்த இடைவெளியைக் குறைப்பதில் தொடர்ந்து தனது பங்கை ஆற்றி வருகிறது.
போட்டி முடிந்த பின்பு ஹர்மன்பிரெட் கவுர், ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா போன்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மரூப்பின் குழந்தையின் மீது அன்பைப் பொழியும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ பார்ப்போர் இதயங்களை வென்றுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான லைக்குகளை குவித்துள்ளது. மகப்பேறு விடுப்புக்குப் பிறகு பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியை வழிநடத்த 30 வயதான பிஸ்மா மரூஃப் அணிக்கு திரும்பினார். இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு மரூப் தனது மகளுடன் வந்திருந்தார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் மிதாலி ராஜ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். மிடில் ஆர்டர் பேட்டிங் சரிவை எதிர்கொண்டாலும் அவர்கள் 244/7 ரன்கள் எடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர் மந்தனா 75 பந்தில் 52 ரன்கள் எடுத்த பிறகு பூஜா வஸ்த்ரகர் (59 பந்துகளில் 67) மற்றும் சினே ராணா (48 ரன்களில் ஆட்டமிழக்காமல் 53) ஆகியோர் இந்தியாவை நல்ல ஸ்கோர் உடன் முடிக்க உதவினர். ராஜேஸ்வரி கயக்வாட் 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்த, இந்தியா 43 ஓவர்களில் பாகிஸ்தானை 137 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்தது. பாகிஸ்தானுக்கு எதிரான 11 ஒருநாள் போட்டிகளில் இந்தியா பெற்ற 11வது வெற்றி இதுவாகும்.
மேலும் படிக்க | அன்று சச்சின், இன்று ஜடேஜா! இந்திய அணியில் தொடரும் சர்ச்சை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR