ஐபிஎல்-ல் கடைசி ஓவரில் அதிக சிக்ஸ்சர்கள் அடித்தது இவரா?
ஐபிஎல் 2022 போட்டிகள் வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்க உள்ளது.
ஐபிஎல் போட்டிகள் இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் அதிக மக்களால் பார்க்கப்படும் ஒரு கிரிக்கெட் போட்டி ஆகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு மார்ச் 26ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. ஐபிஎல்லின் 20 ஓவர்களுமே முக்கியமானதாக பார்க்கப்பட்டாலும், கடைசி ஓவர் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. டி20 போட்டிகளை பொறுத்தவரை கடைசி ஓவர் ஒரு போட்டியையே மாற்ற கூடும். சில வீரர்கள் கடைசி ஓவரில் பல சிக்சர்களை அடித்து தங்களது அணியை வெற்றி பெற செய்துள்ளனர்.
கடைசி ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்:
1. எம்எஸ் தோனி (50 சிக்ஸர்கள்)
இந்திய அணியின் சிறந்த ஃபினிஷராக இருந்த தோனி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸின் பினிஷராக உள்ளார். அவர் கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் ஸ்டைலாக முடித்துள்ளார். தோனி கடைசி ஓவர்களில் 5வது இடத்தில் விளையாடுகிறார். 220 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி கடைசி ஓவரில் மட்டும் 50 சிக்சர்களை அடித்து, முதல் இடத்தில் உள்ளார்.
2. கீரன் பொல்லார்ட் (30 சிக்ஸர்கள்)
வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த பொல்லார்ட் ஐபிஎல்-ல் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். ஒரு ஓவரில் போட்டியை மாற்ற கூறிய வல்லமை படைத்த இவர் இறுதி ஓவரில் 30 சிக்சர்களை அடித்துள்ளார்.
3. ரோஹித் சர்மா (23 சிக்ஸர்கள்)
பொதுவாக ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க கூடிய ரோஹித் ஷர்மா, சில போட்டிகளில் மட்டுமே இறுதி ஓவர் வரை விளையாடி உள்ளார். அப்படி இருந்தும் அதிக சிக்சர்கள் அடித்ததில் 3வது இடத்தில் உள்ளார். கிட்டத்தட்ட கடைசி ஓவரில் 23 சிக்ஸர்களுக்கு மேல் அடித்துள்ளார்.
4. ஹர்திக் பாண்டியா (23 சிக்ஸர்கள்)
சிறந்த ஆல்ரவுண்டர் ஆகா கருதப்படும் ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் தொடரின் இறுதி ஓவரில் சிறப்பாக விளையாடி அணிக்கு உதவியுள்ளார். இதுவரை கடைசி ஓவரில் மட்டும் 23 சிக்சர்களை அடித்துள்ளார்.
5. ரவீந்திர ஜடேஜா (22 சிக்ஸர்கள்)
சென்னை சூப்பர் கிங்ஸின் சிறந்த ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, தனது கடைசி ஓவரில் 15 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
மேலும் படிக்க | CSK ரசிகர்களுக்கு குட்நியூஸ் – அணிக்கு திரும்பிய ஸ்டார் பிளேயர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR