புதுடெல்லி: டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதையடுத்து அணியின் பட்டியல், ஹர்திக் பாண்டியாவின் பங்கு உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்துள்ளன. முதுகு அறுவை சிகிச்சை காரணமாக ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து பந்து வீசவில்லை என்றாலும், மட்டையிலும் அவரது ஆட்டம் மங்கலாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, ஐபிஎல் முடிந்த பிறகு ஹர்திக் பாண்டியாவை (Hardik Pandya) வீட்டிற்கு அனுப்ப பிசிசிஐ விரும்பியதாகவும், ஆனால் எம்எஸ் தோனியின் விருப்பத்தின் பேரில் அவர் நிறுத்தப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. ஹர்திக் பாண்டியாவின் ஃபினிஷிங் ஸ்டைலை பாராட்டிய எம்.எஸ்.தோனி, அவரை அணியில் வைத்திருப்பதின் அவசியத்தை குறித்து விளக்கம் அளித்த பின்னர், அவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளர். தற்போது டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் வழிகாட்டியாக எம்எஸ் தோனி செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஹர்திக் பாண்டியாவுக்கு என்னானது?
அதாவது "உண்மை என்னவென்றால், ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் (IPL 2021 Season) பந்து வீசாததால், அவரை டி20 உலகக் கோப்பை (T20 World Cup 2021) தொடருக்கான அணியில் எடுக்க வேண்டாம், அவரை வீட்டிற்கு அனுப்ப அணியின் தேர்வாளர்கள் விரும்பினர். ஆனால் எம்எஸ் தோனி (MS Dhoni) அவரது ஃபினிஷிங் ஸ்டைல் நன்றாக இருக்கிறது. அவரை அணியில் வைத்துக்கொள்ளலாம் என்று தோனி ஆலோசனை வழங்கியிருக்கிறார். ஆனால் தற்போது அவரின் இருப்பு குறித்து பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


ALSO READ |  நான் தோனியை சிறந்த பேட்ஸ்மேனாக பார்த்ததில்லை - ஹர்திக் பாண்டியா!


ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி கடந்த 6 மாதங்களாக மர்மமாகவே உள்ளது. தற்போது அவருக்கும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. ஹர்திக் பாண்டியா அணியில் இருப்பதால், மற்ற வீரருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அணிக்கு பயன்படுத்தாத ஒரு தகுதியற்ற வீரருடன் நீங்கள் விளையாடுகிறீர்கள். இது சரியல்ல. அவர்கள் சிறப்பாக செயல்படுவதால் மற்றவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. 


ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூரை (Shardul Thakur) சேர்க்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் இந்திய அணிக்கு லோயர் ஆர்டரில் பேட்ஸ்மேன் கிடைப்பது மட்டுமின்றி, ஆறாவது பவுலர் யார் என்ற கேள்விக்கும் பதில் கிடைக்கும் என வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


ALSO READ |  இந்தியா - நியூசிலாந்து போட்டியில் களம் இறங்குவாரா ஹர்திக் பாண்டியா?


முன்னாள் தேர்வாளர்களின் பார்வை என்ன?
டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஹர்திக் பாண்டியாவை சேர்ப்பது குறித்து முன்னாள் தேர்வுக்குழுவினர் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தலைமைப் பயிற்சியாளருமான திலீப் வெங்சர்க்கார் (Dilip Vengsarkar) கூறுகையில், "பிசியோ, டீம் மேனேஜ்மென்ட், அணியின் கேப்டன் மற்றும் அனைத்து முக்கிய வீரர்களும் அவரது உடல்நிலையை ஆய்வு செய்தபின் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும் என்று நம்புகிறேன். இந்த விவகாரத்தில் முடிவெடுத்த கேப்டன், பயிற்சியாளர், பிசியோ, தேர்வாளர் ஆகியோர் பாண்டியா தொடர்பான நிலைமையை ஆய்வு செய்திருக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.


ஹர்திக் ஏன் அணியில் சேர்க்கப்பட்டார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று சந்தீப் பாட்டீல் (Sandeep Patil) கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "விளையாடும் 11 வீரர்கள் பட்டியலில் அவரது தேர்வு பயிற்சியாளர் மற்றும் கேப்டனைப் பொறுத்தது. இது பிசிசிஐக்கு (BCCI) மட்டுமே தெரியும். ஆனால் ஒரு வீரர் உடல்தகுதி இல்லை என்றால், அது தேர்வாளர்களுக்கு வரும். ஐபிஎல் முழுவதுமே அவர் பந்துவீசவில்லை என்றால், அதை தேர்வுக்குழு கவனத்தில் எடுத்துக்கொண்டு முடிவு எடுத்திருக்க வேண்டும். அணியில் சேர்க்கப்படுவதற்கு முன்பு அவர் உடற்தகுதி தேர்வு செய்திருக்க வேண்டும்" என்றார்.


ALSO READ |  மீண்டும் ஃபார்முக்கு வந்த ஹர்திக் பாண்டியா, கதிகலங்கும் நியூசிலாந்து


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR