அடுத்தடுத்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று கொண்டிருப்பதால் நாளுக்கு நாள் வீரர்கள் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.  இதனால் வீரர்கள் குடும்பத்தை விட்டு வெகுநேரம் செலவழிக்க வேண்டியுள்ளது, குறிப்பாக கோவிட்-19 மற்றும் பயோ-பபிள்ஸ் காரணமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் சூழ்நிலை கூட இல்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் குமார் கார்த்திகேயா சிங் புதன்கிழமை தனது தாயுடன் எடுத்துக்கொண்ட ஒரு படத்தைப் பகிர்ந்துகொண்டார்.  அதில் அவர் எழுதி இருந்த கேப்சன் தான் தற்போது வைரல் ஆகி வருகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 38 பந்துகளில் 78 ரன்கள் விளாசல்! தென்னாப்பிரிக்காவை அலறவிட்ட அயர்லாந்து வீரர்


 



"9 வருடங்கள் 3 மாதங்களுக்குப் பிறகு எனது குடும்பத்தினரையும் அம்மாவையும் சந்தித்தேன். எனது உணர்வுகளை வெளிப்படுத்த முடியவில்லை" என்று கார்த்திகேயா ட்விட்டரில் எழுதினார்.  இந்த படம் 18,000 லைக்குகளையும் 900 ரீட்வீட்களையும் பெற்றுள்ளது.  கார்த்திகேயாவின் ஐபிஎல் உரிமையாளரான மும்பை இந்தியன்ஸும் இந்த படத்தைப் பகிர்ந்து "This is what we call as a perfect Home coming" என்று பதிவிட்டுள்ளது.


 



கார்த்திகேயா சிங் ஐபிஎல் 2022-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். நான்கு போட்டிகளில், அவர் 3 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.  இந்த சீசனில் மத்தியப் பிரதேசத்தின் ரஞ்சி கோப்பை வென்ற அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஒருவராகவும் இருந்தார்.  இந்த சீசனில் ரஞ்சி டிராபியில், அவர் 11 இன்னிங்ஸ்களில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி, பதிப்பில் இரண்டாவது அதிக விக்கெட் எடுத்தவர் என்ற சாதனையைப் படைத்தார்.



மேலும் படிக்க | உலக கோப்பை 2022 வெல்ல பிசிசிஐ போட்ட புதிய பிளான்! வெளியான அறிவிப்புகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ