மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை லீக் போட்டிகளுடன் வெளியேறியது. முதல் கோணல் முற்றிலும்  கோணல் என சொல்வதுபோல முதல் 8 போட்டிகளைத் தொடர்ச்சியாகத் தோற்ற மும்பை அணி அதன் பிறகு 4 போட்டிகளை மட்டுமே வென்றது. இதனால் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

5 முறை கோப்பையை வென்று அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி எனும் சாதனையைத் தன் பக்கம் வைத்துள்ள அவ்வணிக்கு நடப்பு ஐபிஎல் தொடர் ஒரு கசப்பான அனுபவமாகவே இருந்திருக்கும். அதேபோல அவ்வணியின் நட்சத்திர ஆட்டக்காரரும் கேப்டனுமான ரோகித் சர்மாவுக்கும் இத்தொடர் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.


                       


எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், அடுத்ததாக 2023ஆம் ஆண்டு தொடரை எதிர்நோக்கியுள்ளது மும்பை. இந்நிலையில் துவண்டு கிடக்கும் மும்பை அணி ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாகத் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, யூடியூப் எங்கேஜ்மெண்டில் மும்பை அணி உலக அளவில் பிரம்மாண்ட வளர்ச்சியைப் பெற்றுள்ளதாம்.


 


ஸ்பெயினைச் சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனமான Deportes & Finanzas ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மார்ச் மாதத்தில் அதிக எங்கேஸ்மெண்டுகளைக் கொண்ட ஸ்போர்ட்ஸ் பிராண்ட் பட்டியலில் உலக அளவில் மும்பை இந்தியன்ஸ்தான் முதலில் உள்ளதாம்.


மேலும் படிக்க | அர்ஜுனை வெளியிலேயே உட்கார வைத்த MI அணி- மகனைப் பற்றி சச்சின் சொல்வது என்ன?


சுமார் 40.7மில்லியனுடன் முதலிடம் பிடித்த மும்பை அணி, FC Barcelona, Liverpool FC மற்றும் Real Madrid ஆகிய பிராண்டுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தச் சாதனையைப் படைத்துள்ளதாம்.



இதைவிடவும் ஓர் ஆச்சர்யம் என்னவெனில், மார்ச் மாதத்தைவிட ஏப்ரல் மாதத்தில் இந்த எங்கேஜிங் சதவிகிதம் சரி பாதிக்கும் மேலாக அதிகரித்துள்ளது. அந்த வகையில், 66.1 மில்லியனுடன் முதலிடம் பெற்றுள்ளது மும்பை.


Liverpool FC 16 மில்லியனுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. யூடியூப் ஷார்ட்ஸ் மற்றும் வழக்கமான வீடியோக்களே மும்பை அணியின் இந்த அபரிமிதமான எங்கேஜிங்குக்குக் காரணமாம்.


மேலும் படிக்க | வருங்கால அம்பயர்கள்.. சைமன் டஃபல் கணித்துள்ள இந்திய வீரர்கள் யார் யார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR