நியூயார்க்: புயல் பெர்த்தா காரணமாக, புதன்கிழமையன்று நடைபெற்ற NASCAR-இன் அணிவகுப்பில் மழை பெய்தது. இதனால் வட கரோலினாவில் சார்லோட் மோட்டார் ஸ்பீட்வேயில் நடக்கவிருந்த கார் ரேஸ் தொடர் பந்தயத்தை ஒத்திவைக்க வேண்டியதாயிற்று.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"பங்கு கார் ஆட்டோ ரேசிங் தேசிய சங்கம்" சுருக்கமாக NASCAR என்று அறியப்படுகிறது.


நாடு முழுவதும் பல்வேறு வகையான பந்தயங்களை மேற்பார்வை செய்யும் அமைப்பு NASCAR ஆகும். NASCAR பதாகையின் கீழ் மூன்று தொடர்கள் நடத்தப்படுகின்றன:


1.ஸ்பிரிண்ட் கோப்பை தொடர்
2.தேசிய அளவில் தொடர்
3.முகாம் உலக டிரக் தொடர்


வியாழக்கிழமை அன்று அலஸ்கோ யூனிபோர்ம்ஸ் 500, 208 லாப்ஸ், 312 மைல் கார் பந்தயமானது வியாழக்கிழமைக்கு மாற்றியமைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக இரண்டு மாத முடக்க நிலையில் இருந்த "நாஸ்கார்" பத்து நாட்களுக்கு முன்னதாக தனது செயல்பாடுகளைத் தொடங்கியது.


பிற செய்தி படிக்கவும்: தந்தையைப் போலவே பைக் ஓட்டவிரும்பும் தோனியின் செல்ல மகள் ஜிவா: வீடியோ வைரல்


ரசிகர்கள் யாரும் ஸ்டாண்டில் நிற்க அனுமதிக்கப்படவில்லை என்பதோடு, பங்கேற்பாளர்கள் அனைவரும் தனிநபர் இடைவெளியைகண்டிப்பா பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் போட்டிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.


ரசிகர்களை திருப்திப்படுத்த சில நேரலை ஒளிபரப்புடன் விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. நாஸ்கார் முதல் நிகழ்வான ரியல் ஹீரோஸ் 400-ஐ, 6.32 மில்லியன் பார்வையாளர்கள் கண்டனர்.


கடந்த வாரம் தென் கரோலினாவின் டார்லிங்டன் ரேஸ்வேயில் நடந்த எக்ஸ்பைனிட்டி தொடர் மழையின் காரணமாக தள்ளி வைத்ததால், பெர்த்தா என்று பெயரிடப்பட்ட இந்த அட்லாண்டிக் சூறாவளி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அமைப்பாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.


சார்லோட்டில்  ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கிய கோககோலா 600 போட்டி திங்களன்று முடிவடைந்தது, சீரற்ற வானிலை காரணமாக கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. 


(மொழியாக்கம் அருள்ஜோதி அழகர் சாமி)