தந்தையைப் போலவே பைக் ஓட்டவிரும்பும் தோனியின் செல்ல மகள் ஜிவா: வீடியோ வைரல்

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் செல்ல மகள் ஜிவா தோனியின் வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களிள் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தும்…. சமீபத்தில் ஜிவா தோனியின் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது….அதில், மிஸ்டர் கூல் என்று பெயர் பெற்ற தந்தை தோனியைப் போலவே ஜிவாவும் பைக்கில் பயணம் செய்ய விரும்புவதை காணமுடிகிறது…..

Updated: May 27, 2020, 08:36 AM IST
தந்தையைப் போலவே பைக் ஓட்டவிரும்பும் தோனியின் செல்ல மகள் ஜிவா: வீடியோ வைரல்

புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் செல்ல மகள் ஜிவா தோனியின் வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களிள் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தும்…. சமீபத்தில் ஜிவா தோனியின் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது….அதில், மிஸ்டர் கூல் என்று பெயர் பெற்ற தந்தை தோனியைப் போலவே ஜிவாவும் பைக்கில் பயணம் செய்ய விரும்புவதை காணமுடிகிறது…..

ஜிவாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில், தந்தை எம்.எஸ். தோனியுயின் பைக்கில் அமர்ந்துக் கொண்டு, பைக்கின் ஸ்டியரிங்கை முறுக்குவதும், பைக்கில் இருந்து ‘வ்ரும்.. வ்ரும்..’ என்ற ஓசை எழும்புவதும் வீடியோவாக பதிவிடப்பட்டுள்ளது…. இந்த வீடியோவில் ஜிவாவின் தாய் சாக்‌ஷி, மகளிடம் “பைக் பிடிக்குமா” என்று கேட்டதற்கு, 'யெஸ்' என்று ஜிவா பதிலளிப்பதையும் பார்க்கமுடிகிறது….

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

2010 ஜூலை நான்காம் தேதியன்று தனது பள்ளித் தோழியான சாக்ஷி சிங் ராவத்தை மணந்தார் மகேந்திர சிங் தோனி… இந்த அழகான தம்பதிகளுக்கு 2015ஆம் ஆண்டு பிப்ரவரி ஆறாம் தேதியன்று ஜிவா என்ற தேவதை பிறந்தாள்… தற்போது ஐந்து வயதாகும் ஜிவாவின்  மனதைக் கவரும் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும்  அவரது தாயும், தந்தையும்  சமூக ஊடகங்களில் பகிர்கின்றனர்.  

இந்தியாவில் மிகவும் பிரபலமான நட்சத்திரக் குழந்தை ஜிவா என்பது குறிப்பிடத்தக்கது.ஜிவாவுக்கென்றே பல பிரத்யேகமான பல்வேறு ரசிகர் பக்கங்கள் சமூக ஊடகங்களில் இருக்கிறது. 

 

(மொழியாக்கம் -  ஹேமலதா.எஸ்)