இன்னும் சில தினங்களில் 15ஆவது ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. இதற்காக ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். 2017ஆம் ஆண்டு பஞ்சாப் அணியால் சுமார் 3 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அவர் அதன் பின்னர் ஐதராபாத் அணியில் இணைந்தார். அதிலிருந்து அந்த அணிக்காகத் தொடர்ச்சியாக விளையாடிவருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துல்லியமான யார்க்கர் பந்துவீச்சால் எதிரணியினரை திக்குமுக்காட வைப்பதைத் தனது பலமாகக் கொண்டுள்ள அவர், ஜஸ்ப்ரீத் பும்ராவுக்குப் பிறகு சிறப்பாக யார்க்கர் வீசக்கூடிய பந்துவீச்சாளராக அறியப்படுகிறார். ஐபிஎல்லில் தனக்குக் கிடைத்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துகொண்ட நடராஜனுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கான இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி வாயிலாக சர்வதேசக் கிரிக்கெட்டில் நுழைந்த அவர், ஒரே தொடரில் மூன்றுவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் எனும் சிறப்பையும் பெற்றார்.


மேலும் படிக்க | ரெய்னாவுக்குத் திடீர் விருது: ஏன் தெரியுமா?!


இந்த நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல்லுக்கு நடராஜன் தீவிர பந்துவீச்சுப் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். இது தொடர்பான வீடியோவை ஐதராபாத் அணி வெளியிட்டுள்ளது. நடராஜனின் பந்துவீச்சில் ஸ்டெம்ப் இரண்டாக உடையும் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. 



 



2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணி விளையாடும் முதல் போட்டி வரும் 29ஆம் தேதி நடக்கவுள்ளது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஐதராபாத் எதிர்கொள்கிறது.


மேலும் படிக்க | ஐபிஎல் ஏலம் மூலம் கம்பேக் கொடுப்பாரா நடராஜன்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR