புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யும் விதிமுறைகளை மாற்றியமைக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் BCCI. இனிமேல் இந்த விதிமுறைகளை பூர்த்தி செய்பவர்கள் தான் இந்திய அணியில்  இடம்பெறமுடியும்….  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன் முதல்கட்டமாக டீம் இந்தியாவுக்கு புதிய கட்டாய உடற்பயிற்சி விதியை பிசிசிஐ (BCCI) அறிமுகப்படுத்துகிறது. சர்வதேச கிரிக்கெட்டின் மாறி வரும் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உடல் தகுதிகளில் முதலில் கவனம் செலுத்தும் பி.சி.சி.ஐ, அணி இந்திய வீரர்களுக்கான பயிற்சி திட்டத்தில் வேகம் மற்றும் சகிப்புத்தன்மையின் அளவை பரிசோதிக்க 2 கி.மீ நேர சோதனையை (2-km time trials) கட்டாயமாக அறிமுகப்படுத்தியுள்ளது.


"தற்போதைய உடற்பயிற்சி தரமானது உடற்தகுதியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் பெரும் பங்கைக் கொண்டுள்ளது என்பதை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உணர்ந்தது. இப்போது நமது உடற்தகுதி நிலையை மற்றொரு நிலைக்கு கொண்டு செல்வது முக்கியம். நேர சோதனை பயிற்சிகளை மேற்கொள்வது, வீரர்கள் மேலும் சிறப்பாக செயல்பட உதவும். வாரியம் ஒவ்வொரு ஆண்டும் தர நிர்ணய அளவீடுகளைப் புதுப்பிக்கும்" என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.


Also Read | நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு மஹிந்திரா கார் பரிசு: ஆனந்த் மஹிந்திரா


பி.சி.சி.ஐ.யின் ஒப்பந்த வீரர்கள் மற்றும் இந்திய அணியில் (Indian team) இடம் பெற போட்டியிடுவோர் இந்த சோதனையில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக இருக்கும்.
புதிய விதிமுறைப்படி, வேகப்பந்து வீச்சாளர்களுக்கான (fast bowlers) அளவுகோல் 8 நிமிடங்கள் 15 வினாடிகள் இருக்கும். அதாவது அவர்கள் 2 கிலோ மீட்டர் தொலைவை 8 நிமிடங்கள் 15 வினாடிகளில் கடக்க வேண்டும்.


பேட்ஸ்மேன்கள் (batsmen), விக்கெட் கீப்பர்கள் (wicket-keepers) மற்றும் ஸ்பின்னர்களுக்கு (spinners), தரநிலை 8 நிமிடங்கள் 30 வினாடிகள் இருக்கும். அதாவது அவர்கள் 2 கிலோ மீட்டர் தொலைவை 8 நிமிடங்கள் 30வினாடிகளில் கடக்க வேண்டும்.


அதேபோல், எலைட் (Elite) தரத்தில் உள்ள வீரர்கள் சுமார் 6 நிமிடங்களில் மற்றும் அமெச்சூர் வீரர்கள் 15 நிமிடங்களில் 2 கி.மீ தொலைவை கடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Also Read | IPL 2021 அணிகளில் இடம் பெற்ற & OUT ஆன வீரர்கள், முழுமையான பட்டியல்


இந்த ஆண்டின் பிற்பகுதியில் டி 20 உலகக் கோப்பைக்கான தேர்வில் இது ஒரு முக்கிய அளவுகோலாக இருக்கும். ஆஸ்திரேலியாவில் (Australia) நடந்த டெஸ்ட் தொடரிலிருந்து திரும்பிய வீரர்களுக்கு சோதனைகளில் பங்கேற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


இங்கிலாந்துக்கு (England) எதிரான தொடரில் (T20I மற்றும் 3 ODI) பங்கேற்கும் போட்டியிடும் வீரர்கள் இந்த சோதனையை மேற்கொள்ளவேண்டும்.  


பிப்ரவரி, ஜூன் மற்றும் ஆகஸ்ட் / செப்டம்பர் மாதங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.


Also Read | அந்நிய மண்ணில் வெற்றிகண்டால் வந்தேமாதரம் பரிசு Viral Video


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR