அந்நிய மண்ணில் வெற்றிகண்டால் வந்தேமாதரம் பரிசு Viral Video

பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. அப்போது, ஒரு ரசிகர், "பாரத் மாதா கி ஜெய்" மற்றும் "வந்தே மாதரம்" என்று கோஷமிடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.அவர் ஆஸ்திரேலியர் என்பதும், போட்டி நடைபெறுவது பிரிஸ்பேனில் என்பதும் தான் வீடியோ வைரலாகும் ரகசியம்....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 20, 2021, 06:31 PM IST
  • பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது
  • அப்போது, ஆஸ்திரேலிய ரசிகர், "பாரத் மாதா கி ஜெய்" "வந்தே மாதரம்" என்று கோஷமிட்டார்
  • அந்தம் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல்
அந்நிய மண்ணில் வெற்றிகண்டால் வந்தேமாதரம் பரிசு Viral Video title=

பிரிஸ்பேனில் நடைபெற்ற இறுதி டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய ரசிகர் 'வந்தேமாதரம்' என்று முழங்கும் வீடியோ சமுக ஊடகங்களில் வைரலாகிறது

பிரிஸ்பேனில் கபாவில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு (Australia) எதிரான டெஸ்ட் தொடரை வென்றது. அப்போது ஒரு கிரிக்கெட் ரசிகர், "பாரத் மாதா கி ஜெய்" மற்றும் "வந்தே மாதரம்" என்று கோஷமிடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது நடந்த்து இந்தியால் அல்ல ஆஸ்திரேலியாவில் என்பதும், அந்த ரசிகர் ஆஸ்திரேலியர் என்ற விஷயமும் தான் இந்த வீடியோ வைரலாக்கியிருக்கிறது.

வைரல் வீடியோவில், ஆஸ்திரேலிய ரசிகர் பிரிஸ்பேனில் இந்தியாவை (Team India) பாராட்டும் விதமாக இந்திய அணியினருக்கு முழக்கங்கள் மூலம் வாழ்த்து சொல்கிறார். வைரலாகும் இந்த வீடியோ இந்திய ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி இருக்கிறது. 

Also Read | ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றிக்கொடி நாட்டிய இந்திய அணிக்கு ₹5 கோடி Bonus

சமூக ஊடக (Social Media) பயனர்களின் கவனத்தை ஈர்த்த இந்த ரசிகர்களின் வீடியோ இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தின் 4 வது நாளன்று வெளியாகியுள்ளது. மழையால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. அந்த இடைவேளையின் போது, ரசிகர்கள் "பாரத் மாதா கி ஜெய்" மற்றும் "வந்தே மாதரம்" என்று கோஷமிடுவதைக் காண முடிந்தது.

இந்த தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா வாழ்த்துகளை பெற தகுதியானது என்று ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் (Justin Langer) பாராட்டினார்.  

Also Read | India vs England முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்கள் அறிவிப்பு

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News