அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை சாய்த்த பாக்., பவுலர்
இங்கிலாந்து அணிக்கு எதிராக 2வது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது, அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை சாய்த்து சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி முல்தான் மைதானத்தில் தொடங்கியது. பரபரப்பாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் இங்கிலாந்து அணி களம் கண்டது. அந்தப் போட்டியில் வெற்றியின் விளம்பில் பாகிஸ்தான் இருந்தபோதிலும், கடைசி 9 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை சந்தித்தது. குறைந்தபட்சம் டிரா செய்திருக்ககூடிய வாய்ப்புகள் இருந்தபோதும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியது பாகிஸ்தான்.
மேலும் படிக்க | PAKvsENG: ஹோட்டலுக்கு அருகில் துப்பாக்கி சத்தம்! பதட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள்!
இருப்பினும் சொந்த மண்ணில் விளையாடும் தெம்புடனும், இங்கிலாந்தை இந்த போட்டியில் வீழ்த்த முடியும் நம்பிக்கையுடனும் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, முதலில் பந்துவீசியது. டாஸ் வென்று பேட்டிங் இறங்கிய இங்கிலாந்து அணி நிதானமாக ஆரம்பத்தில் விளையாடியது. ஓபனர் ஷாக் கிராலியை 19 ரன்களுக்கு போல்டாகி வெளியேறினார். அவரது விக்கெட்டை இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமான அப்ரார் அகமது கைப்பற்றினார். பென் டக்கெட் மற்றும் ஒல்லி போப் இருவரும் பார்ட்னர்ஷிப் போட்டு அதிரடியாக விளையாடினர்.
அவர்களின் பார்ட்னர்ஷிப்பையும் உடைத்த அப்ரார் அகமது, அடுத்தடுத்து இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை கைப்பற்றிக் கொண்டே இருந்தார். இங்கிலாந்து அணியின் முதல் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். கடைசி நேரத்தில் ஷகித் மகமூத் 3 விக்கெட்டுகளை கைப்பற்ற இங்கிலாந்து அணி 281 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 7 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார். பாகிஸ்தான் அணிக்காக அறிமுக போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையும் அவர் வசம் வந்தது.
மேலும் படிக்க | அடுத்த ஆண்டு இந்திய அணி விளையாடும் போட்டிகள்: முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ