Tokyo Paralympics: பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் 54 பேர் கலந்துகொள்கின்றனர். இந்திய அணியை தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வழிநடத்துகிறார்
புதுடெல்லி: டோக்கியோ பாராலிம்பிக் போட்டி ஆகஸ்டு 24ந்தேதி தொடங்குகிறது. இந்தியாவின் சார்பில் 40 ஆண்கள் 14 பெண்கள் கொண்ட அணியினர் ஜப்பானுக்கு செல்கின்றனர். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள ஜப்பான் செல்ல இருக்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 19 வீரர்கள் 9 போட்டிகளில் கலந்துகொண்டு, தங்கம் உள்பட பல்வேறு பதக்கங்களை பெற்று நாட்டுக்கு பெருமை தேடித்தந்தனர். அதையடுத்து, பாராலிம்பிக் போட்டிகளில் (2020 Paralympic Games) கலந்துக் கொள்ள ஊக்கமளிக்கப்பட்டு, தற்போது 54 பேர் கலந்துகொள்கின்றனர் என்பது பாராட்டத்தக்க முன்னேற்றம்.
இந்திய அணிக்கு தமிழ்நாட்டின் சேலம் மாவட்டதைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர்தான் ஒலிம்பிக் போட்டியில் தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். ஒலிம்பிக்கில் இந்திய கொடியை ஏந்தப் போகும் முதல் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு (Mariappan Thangavelu) என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசில் தலைநகர் ரியோவில் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் தங்கவேல் தங்கம் வென்றார்.
பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுடன் காணொலிக்காட்சி மூலம் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Modi), தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு மற்றும் அவரது குடும்பத்தினருடன் உரையாடினார்.
பெங்களூருவில் பயிற்சி பெற்று வரும் மாரியப்பனுடன் பேசிய பிரதமர், அதன்பிறகு சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டியில் வசிக்கும் மாரியப்பனின் தாயார் சரோஜா, மற்றும் மாரியப்பனின் சகோதரர்களிடமும் பேசினார்.
இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகள் யூரோஸ்போர்ட் (Eurosport) சேனலில் நேரலையாக ஒளிபரப்பாகும்.
Also Read | Neeraj Chopra: ஒலிம்பிக்ஸ் தங்க மகன் அசைவ பிரியராக மாறிய கதை தெரியுமா..!!
மாரியப்பனுக்கு ஊக்கமளித்து, இந்த முறையும் நிச்சயம் தங்கம் வெல்வீர்கள் என்று பாராட்டிய பிரதமர் மோடி, மாரியப்பனின் தாயார் சரோஜாவிடம் பேசியபோது, நல்ல பிள்ளையை பெற்றுள்ளீர்கள் என்று பாராட்டினார்.
”ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்”
என்ற ஈரடி குறள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் 54 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, அனைவரும் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Also Read | ICC T20 World Cup 2021: போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR