ICC T20 World Cup 2021: போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது

இந்திய மற்றும் பாகிஸ்தான் அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் உள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 17, 2021, 11:46 AM IST
ICC T20 World Cup 2021: போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது title=

புதுடெல்லி: 2021 டி 20 உலகக் கோப்பைக்கான (ICC T-20 World Cup 2021) அட்டவணையை ஐசிசி அறிவித்துள்ளது. 2021 டி 20 உலகக் கோப்பை போட்டிகள் அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி நவம்பர் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இந்திய மற்றும் பாகிஸ்தான் அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், 2021 டி 20 உலகக் கோப்பையில் (ICC T20 World Cup 2021) இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் உள்ளன. அக்டோபர் 24 ஆம் தேதி துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுகிறது.

அனைத்து அணிகளும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. சர்வதேச டி20 தரவரிசை பட்டியலின் அடிப்படையில் உலக கோப்பைக்கான அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. 

க்ரூப் 1 - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்

க்ரூப் 2- இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான்

தகுதி சுற்றில் க்ரூப் ஏ-வின் வெற்றியாளர், க்ரூப் பி-யின் ரன்னர் ஆகிய அணிகள் க்ரூப் 1-லும், க்ரூப் ஏ ரன்னர், க்ரூப் பி வின்னர் அணிகள் க்ரூப் 2-லும் சேர்க்கப்படுவார்கள்.

தகுதிச் சுற்றில் போட்டியிடும் அணிகள்:

க்ரூப் ஏ : இலங்கை, ஐயர்லாந்தி, நெதர்லாது, நமிபியா

க்ரூப் பி : வங்கதேசம், ஸ்காட்லாந்து, பப்பா நியூ கினியா, ஓமன். 

இந்திய அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 24 ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

இந்திய அணியின் அட்டவணை:

அக்டோபர் 24 இந்தியா – பாகிஸ்தான்

அக்டோபர் 31 இந்தியா- நியூசிலாந்து

நவம்பர் 3 இந்தியா – ஆப்கானிஸ்தான்

நவம்பர் 5 இந்தியா- க்ரூப் பி வின்னர்

நவம்பர் 8 இந்தியா- க்ரூப் ஏ ரன்னர்

ALSO READ: India vs England, 2nd Test: மூன்றாவது வெற்றியை பதிவு செய்த இந்தியா

அக்டோபர் 24 ஆம் தேதி துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெறவுள்ள டி 20 உலகக் கோப்பை போட்டிகள் ஓமான், அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய நகரங்களில் நடைபெறும். 8 நாடுகளின் தகுதிப் போட்டிகள் செப்டம்பர் 23 முதல் தொடங்கவுள்ளன. 

இலங்கை, வங்கதேசம் மற்றும் அயர்லாந்து ஆகியவை தகுதி சுற்று போட்டியில் பங்கேற்க உள்ளன. இந்த முறை சூப்பர் 12 அணிகள் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சூப்பர் -12 போட்டிகளுக்கு முன் தகுதிப் போட்டிகள் நடைபெறும்.

ALSO READ: India vs England, 2nd Test: மூன்றாவது வெற்றியை பதிவு செய்த இந்தியா

ALSO READ: T20 உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் இருந்து UAEக்கு மாறியது - BCCI

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News