அமெரிக்காவில் இருந்து பறந்து வந்த ப்ரீத்தி ஜிந்தா - வைரலாகும் வீடியோ
சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியைக் காண அமெரிக்காவில் இருந்து பறந்து வந்துள்ளார் ப்ரீத்தி ஜிந்தா
ஐபிஎல் போட்டிக்கு இணையாக பிரபலமானவர் ப்ரீத்தி ஜிந்தா. பஞ்சாப் அணி விளையாடும் போட்டிகளை பார்க்க தவறாமல் வந்துவிடும் அவர், இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் கூட அந்த அணிக்காக பங்கேற்கவில்லை. பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அவர், அண்மையில் தாய்மை அடைந்தார். அந்த நேரத்தில் இந்தியாவில் ஐபிஎல் ஏலம் நடைபெற்றதால், அவரால் பங்கேற்க முடியவில்லை.
மேலும் படிக்க | விராட் கோலிக்கு டேனியல் வெட்டோரி கொடுத்திருக்கும் முக்கிய ஆலோசனை
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க முடியாது என்பதை டிவிட்டர் பக்கத்திலும் வேதனையுடன் பகிர்ந்திருந்தார். மேலும், பஞ்சாப் அணி விளையாடிய போட்டிகளை பார்க்கவும் அவர் வராமல் இருந்தார். இது பஞ்சாப் ரசிகர்களுக்கு சோகமாக இருந்த நிலையில், நேற்று திடீரென ஸ்டேடியத்தில் இருந்தார் ப்ரீத்தி ஜிந்தா. சென்னைக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியை உற்சாகப்படுத்த அமெரிக்காவில் இருந்து பறந்து வந்துள்ளார்.
அவரை பார்த்தும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். முதல் முறையாக வந்து அவர் உற்சாகப்படுத்திய ஆட்டத்தில், பஞ்சாப் அணி வெற்றியும் பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய ஷிகர் தவான் 59 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தார். அவருக்கு பக்கபலமாக விளையாடிய பனுகா ராஜபக்ச 42 ரன்கள் விளாசினார்.
மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியும் சிறப்பாக விளையாடியது. தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், மிடில் ஆர்டரில் இறங்கிய அம்பத்தி ராயுடு 39 பந்துகளில் 78 ரன்கள் விளாசினார். கடைசி ஓவரில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தபோது தோனி களத்தில் இருந்தார். இதனால் சென்னை அணியினர் நம்பிக்கையுடன் இருந்தனர். முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய தோனி, 2வது பந்தில் கேட்சாக, சென்னை அணியும் தோல்வியை தழுவியது.
மேலும் படிக்க | சென்னை சூப்பர் கிங்ஸூக்கு இருக்கும் கடைசி ஆயுதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR