நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸூக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடக்கம் முதலே சரியாக அமையவில்லை. இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் தோல்வியை தழுவி இருப்பதால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு என்பது மிக மிக கடினமாகிவிட்டது.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கத்திமேல் நடக்கத் தொடங்கியுள்ளது. இனி வரும் 6 போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும். மேலும், நிகர ரன்ரேட்டுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். தற்போது சிஎஸ்கே அணியின் ரன்ரேட் மைனஸ் 0.534 ஆக உள்ளது.
மேலும் படிக்க | 'IPL' ஃபேனா நீங்க? அப்போ கண்டிப்பா இது உங்களுக்குத்தான்! #Facts-Of-IPL
உலகின் தலைச்சிறந்த பினிஷராக தோனி இருந்தாலும், அனைத்து போட்டிகளிலும் அவரே வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நிலைக்கு சிஎஸ்கே வீரர்கள் கொண்டுவந்து விடுவது தான் வேடிக்கையாக உள்ளது. நேற்றைய போட்டியிலும் 2 ஓவர்களில் 35 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தோனி தான் களத்தில் இருந்தார். கடைசி ஓவரில் 27 ரன்கள் அடிக்க வேண்டியிருந்தது.
ஆனால், இந்தமுறை ஏமாற்றிய தோனி, முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி அடுத்த பந்தில் கேட்சாகி வெளியேறினார். பெரிதும் எதிர்பார்த்த ரிசகர்களுக்கு ஏமாற்றமே விஞ்சியது. நடப்பு ஐபிஎல் தொடரில் 2 போட்டிகளிலும் சென்னை அணியை பஞ்சாப் அணி வீழ்த்தியுள்ளது. தற்போது புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8வது இடத்தில் உள்ளது.
மேலும் படிக்க | கடைசி ஓவர் திக் திக்.. வெற்றி பெற்றது பஞ்சாப்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR