ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி இந்த ஆண்டில் பார்ம் அவுட்டில் தவிக்கிறார். அவர் இப்படி விளையாடுவதை இதுவரை பார்த்திராத கிரிக்கெட் ரசிகர்கள் அவர் பார்முக்கு வர வேண்டும் என விரும்புகின்றனர். இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் விராட் கோலி பார்ம் குறித்து கவலை கொண்டுள்ளனர். ஐபிஎல் கமெண்டரி பேனலில் இடம் பெற்றிருக்கும் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், கோலியை இப்படி பார்ப்பது மிகவும் கஷ்டமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | CSK அழைப்புக்காக காத்திருக்கிறேன் - தினேஷ் கார்த்திக்
அவர் நிச்சயம் பார்முக்கு திரும்புவார், திரும்ப வேண்டும் என நம்பிக்கை தெரிவித்த அவர், இத்தகைய சூழ்நிலையை தானும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எதிர்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2022-ல் 8 போட்டிகளில் விளையாடியிருக்கும் விராட் கோலி வெறும் 119 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். ஒரே ஒரு மேட்சில் மட்டும் அதிகபட்சமாக 48 ரன்கள் சேர்த்திருக்கிறார். 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் தனி ஒருவராக ஆர்சிபி அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற விராட் கோலி, அந்த சீசனில் 973 ரன்கள் குவித்தார். தனிநபர் ஒருவர் ஒரு ஐபிஎல் தொடரில் எடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்து வருகிறது.
அவருடைய பார்ம் அவுட் கவலையளிப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியாக இரண்டு முறை இந்த தொடரில் கோல்டன் டக்அவுட்டாகியிருக்கிறார். இது குறித்து பேசியுள்ள ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் டேனியல் வெட்டோரி, கோலிக்கு சிறந்த ஆலோசனை ஒன்றை கொடுத்துள்ளார். அவர் பார்ம் அவுட்டில் இருந்து மீண்டும் வர வேண்டும் என்றால், ஆர்சிபி அணிக்காக விராட் கோலி ஓபனிங் பேட்டிங் இறங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இது அவர் மீது இருக்கும் அழுத்தத்தை குறைத்து சிறப்பாக பேட்டிங் செய்ய உதவும் என்றும் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | சென்னை சூப்பர் கிங்ஸூக்கு இருக்கும் கடைசி ஆயுதம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR