ரஹானேவுக்கு ’செக்’ வைத்த கே.எல்.ராகுல்..!
இந்திய டெஸ்ட் அணிக்கு துணைக் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டிருப்பது, ரகானேவுக்கான வாய்ப்பை கேள்விக்குறியாக்கியிருப்பதாக ஆகாஷ்சோப்ரா கணித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியில் துணைக் கேப்டனாக இருந்த ரஹானேவுக்கு, இது கடினமான காலம். மோசமான பார்ம் காரணமாக தடுமாறி வரும் அவருக்கு இந்திய அணியிலும் இடம் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தாலும், ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா? என்பது அவருக்கு கேள்விக்குறி. ஒருவேளை வாய்ப்பு கிடைத்தால், அதனை தவறவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் ரஹானே, தென் ஆப்பிரிக்கா செல்வதற்கு முன்பு வினோத் காம்பிளி உள்ளிடோரிடம் நேரடியாக சென்று ஆலோசனை பெற்றுக் கொண்டார்.
ALSO READ | திடீர் என்று பிசிசிஐ-ல் இருந்து விலகிய முக்கிய அதிகாரி - காரணம் என்ன?
கே.எல்.ராகுலின் ஃபார்ம் கடந்த சில ஆண்டுகளாக உட்சத்தில் இருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் சிறப்பான பங்களிக்கும் வேர்ல்டு கிளாஸ் பிளேயராக உயர்ந்துள்ளார். இதனால், அவருக்கான இடம் இந்திய அணியில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாகவே தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது ரஹானேவுக்கான எச்சரிக்கை சமிக்கை என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இனி வரும் காலங்களில் ஆடும் லெவனில் ரஹானேவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது கேள்விக்குறி எனத் தெரிவித்துள்ள அவர், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவருக்கான இடத்தில் ராகுல் மற்றும் ரிஷப் பந்தை தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும் எனத் தெரிவித்துள்ளார். விரைவில் குறுகிய வடிவிலான கிரிக்கெட் தொடர்களுக்கும் கே.எல்.ராகுல் இந்திய அணியின் துணைக் கேப்டனாக அறிவிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள அவர், இந்திய கிரிக்கெட் அணி முழுமையான மாற்றத்தை சந்தித்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இந்த காரணங்களை வைத்து பார்க்கும்போது ரஹானேவின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமனத்துக்கு தயாராகிக் கொண்டிருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
ALSO READ | பிரச்சனைகளுக்கு மத்தியில் விராட் கோலியை பாராட்டிய கங்குலி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR