இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைமை மருத்துவ அதிகாரி அபிஜித் சால்வி (Abhijit Salvi) தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார். சால்வி பிசிசிஐயின் வயது சரிபார்ப்பு, ஊக்கமருந்து எதிர்ப்பு மற்றும் மருத்துவப் பிரிவின் பொறுப்பாளராக இருந்தார்.
தனது நோட்டீஸ் பீரியட் காலம் நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததாகவும், ஆனால் டிசம்பர் 7-ம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இறுதி வரை அவர் தொடர்ந்ததாகவும் சால்வி கூறினார்.
ALSO READ | மும்பை அணியை பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - சஞ்சீவ் கோயங்கா
கோவிட் தொற்று காலங்களில் சால்வியின் பங்கு பிசிசிஐக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. வழக்கமான சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் முறை சர்வதேச கிரிக்கெட்டின் ஒரு பகுதியாக மாறியது. ராஜினாமா குறித்து சால்வி கூறுகையில், "பிசிசிஐ உடனான பயணம் உண்மையிலேயே அற்புதமாக இருந்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு நான் வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தேன். அதனால் தற்போது பிசிசிஐ-யில் இருந்து விலகுகிறேன்.
இந்த தொற்று காலத்தில் பணிபுரிவது மிகவும் சவாலானது. ஆனால் நாங்கள் கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளையும் நடத்தினோம். உள்நாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன, அதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அடுத்த மாதம் விஜய் மெர்ச்சன்ட் டிராபி (Vijay Merchant Trophy) என்று அழைக்கப்படும் U-16 சிறுவர்களுக்கான தேசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னதாக சால்வி ராஜினாமா செய்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்ற ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பையின் இரண்டு சீசன்களிலும் முழு மருத்துவ ஏற்பாடுகளை சால்வி மேற்பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | பிரச்சனைகளுக்கு மத்தியில் விராட் கோலியை பாராட்டிய கங்குலி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR