இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய பேட்டிங் ஜாம்பவானும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான ராகுல் டிராவிட் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ராகுல் டிராவிட் நவம்பர் 17 ஆம் தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான ஹோம்ஸ் தொடரில் இருந்து இந்தியாவின் முழுநேர பயிற்சியாளராக தனது பதவிக்காலத்தை தொடங்குவார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"திருமதி. சுலக்ஷனா நாயக் மற்றும் திரு. ஆர்.பி. சிங் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு புதன்கிழமை ஒருமனதாக திரு. ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக (மூத்த ஆண்கள்) நியமித்தது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள தொடரில் இருந்து பொறுப்பேற்பார்” என்று பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



டி20 உலகக் கோப்பை (T20 World Cup) முடிந்தவுடன் தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு பதிலாக டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார். 2014 ஆம் ஆண்டு இந்திய பயிற்சியாளர் அமைப்பில் முதலில் அதன் மேலாளராக நுழைந்த சாஸ்திரி, அனில் கும்ப்ளே ராஜினாமா செய்த பின்னர் 2017 இல் தலைமை பயிற்சியாளராக ஆனார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2019 இல், சாஸ்திரி இரண்டு வருட காலத்திற்கு மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 


ALSO READ: இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார்? 


இருப்பினும், டிராவிட் (Rahul Dravid) இந்திய கிரிக்கெட்டை ஒரு புதிய தளத்துக்கு கொண்டு செல்வதற்கான களம் இப்போது அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா ஏ மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிகளில் பெரும்பாலான இளைஞர்களுடன் பணியாற்றிய டிராவிட், இளம் வீரர்களுக்கு புதியவர் அல்ல. ஜூனியர் மட்டத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியதால், டிராவிட் ஜூலை மாதம் இலங்கையில் இந்தியா ஆடிய தொடருக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்தியா ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது, ஆனால் டி20 தொடரை இழந்தது. தொடரின் முடிவில், டிராவிட்டிடம் பயிற்சியாளராக முழுநேரப் பொறுப்பை ஏற்க விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்டபோது, அதில் டிராவிட் அதிக ஆர்வத்தைக் காட்டவில்லை. ஆனால் இப்போது அவரது கிரிக்கெட் பயணத்தின் இந்த புதிய அத்தியாயம் தொடங்குகிறது.


"இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது ஒரு பெருமைக்குரிய விஷயம். நான் இந்த பொறுப்பை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். திரு. சாஸ்திரியின் கீழ், அணி சிறப்பாக செயல்பட்டது. NCA, U19 மற்றும் India A அமைப்பில் பெரும்பாலான வீரர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றியதால், ஒவ்வொரு நாளும் முன்னேற வேண்டும் என்ற ஆர்வமும் விருப்பமும் அவர்களுக்கு இருப்பது எனக்குத் தெரியும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் சில மார்க்யூ மல்டி டீம் நிகழ்வுகள் உள்ளன. மேலும் வீரர்கள் மற்றும் துணை ஊழியர்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று டிராவிட் கூறியதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.


டிராவிட் நியமிக்கப்பட்டதை பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய அணி கேப்டனுமான சவுரவ் கங்குலி (Sourav Ganguly) வரவேற்றார். டிராவிட்டின் சிறந்த பயிற்சி அனுபவமும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) இயக்குநராக அவர் இருந்த அனுபவமும் இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் பல விதங்களில் உதவ வழிவகுக்கு என நம்புவதாக கங்குலி தெரிவித்தார்.


ALSO READ: சிக்கலில் விராட் கோலி, ரவி சாஸ்திரி அதிரடி மாற்றத்துக்கு தயாராகும் இந்திய அணி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR