இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராகும் ராகுல் டிராவிட்

டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு, ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருப்பார், சாஸ்திரி சகாப்தம் முடிவுக்கு வரும்

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 16, 2021, 10:50 AM IST
  • ரவி சாஸ்திரி சகாப்தம் முடிவுக்கு வரும்.
  • ராகுல் டிராவிட் பொறுப்பேற்பது கிட்டத்தட்ட உறுதி
  • தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ராகுல் உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளராகும் ராகுல் டிராவிட் title=

புது டெல்லி: இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ராகுல் திராவிட் (Rahul Dravid), நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த ஐபிஎல் 2021 இறுதிப்போட்டியின் போது இந்திய சீனியர் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்க ஒப்புக்கொண்டார் எனக் கூறப்படுகிறது. ஆனால் இதுக்குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

துபாயில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி (Sourav Ganguly) மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் ராகுல் டிராவிட் உடன் ஒரு சந்திப்பை நடத்தி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கவுள்ள டி-20 உலகக் கோப்பைக்குப் (T20 World Cup) பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்க வேண்டும் என அவரிடம் கேட்டுக்கொண்டு உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரியின் சகாப்தம் முடிவடையுள்ளது. அவருக்கு பதிலாக டிராவிட் வருவார். அவர் 2023 வரை அணி பயிற்சியாளராக இருப்பார். மறுபுறம், பராஸ் மம்ப்ரே (Paras Mhambrey) பந்துவீச்சு பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ALSO READ |  இரட்டைப் பதவி புகார்; CoA சான்று பெற்றார் ராகுல் திராவிட்!

டிராவிட் தற்போது பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியின் (National Cricket Academy) தலைவராக உள்ளார். பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக எந்த பயிற்சியாளர் பதவிக்கான விளம்பரத்தையும் வெளியிடவில்லை. இது குறித்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் அதிகாரி வெள்ளிக்கிழமை (அக்டோபர் 15) இரவு நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியின் போது, "​ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக மாறுவார். அவர் விரைவில் என்சிஏ தலைவர் பதவியில் இருந்து விலகுவார்" எனத் தெரிவித்தனர்.

மேலும் டிராவிட்டின் நம்பிக்கைக்குரிய உதவியாளர் பராஸ் மம்ப்ரே பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இருக்கும் பரத்தூக்கு பதிலாக இவர் நியமிக்கப்படுவார். பீல்டிங் பயிற்சியாளராக இருக்கும் ஆர். ஸ்ரீதரை மாற்றுவது குறித்து எந்த முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை. அதேபோல விக்ரம் ரத்தோர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தொடருவார்.

ரவி சாஸ்திரி நியூசிலாந்து தொடர் வரை தனது பதவியில் நீடிக்க வேண்டும் என்று பி‌சி‌சி‌ஐ வாரியம் முதலில் கருதியது. ஆனால் பின்னர் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டது. அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இரண்டாம் தர இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் இருந்தார். நியூசிலாந்துக்கு எதிராக (New Zealand tour of India, 2021) சொந்த மண்ணில் இந்திய அணி மூன்று டி-20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. டி 20 உலகக் கோப்பை முடிந்த உடனேயே இந்த சுற்றுப்பயணம் நடைபெறும்.

ALSO READ |  Ravi Shastri vs Rahul Dravid: இந்திய அணியின் பயிற்சியாளராக கபில் தேவின் ஆதரவு யாருக்கு?

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதரின் பதவிக்காலம் டி-20 உலகக் கோப்பைக்குப் பிறகு முடிவடைகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News