இந்திய அணியின் ஜாம்பவான்கள் பட்டியலை எடுத்தால் அதில் ராகுல் டிராவிட் பெயரும் இருக்கும். இந்திய அணியின் தடுப்புச் சுவர் என அழைக்கப்பட்ட டிராவிட், 1996 முதல் 2012 வரை இந்தியாவுக்காக விளையாடினார். 500-க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடி 24,000 ரன்களுக்கு மேல் அனைத்து பார்மேட்டுகளிலும் எடுத்த அவர், கிட்டத்தட்ட 50 சதங்கள் அடித்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால்,  அவரைப் பற்றி சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கிறது. அது என்னவென்றால், இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தபோதே ஸ்காட்லாந்து அணிக்காகவும் ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | IND vs IRE: வெற்றியை தொடர இந்த வீரரை வெளியே அனுப்ப திட்டமிடும் இந்திய அணி?


பொதுவாக இந்திய கிரிக்கெட் வாரியம் வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாடுவதை அனுமதிப்பதில்லை. அப்படி ஒருவர் விளையாட வேண்டும் என்றால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்தால் மட்டுமே பங்கேற்க முடியும். அதன்பிறகு அந்த பிளேயர் இந்தியாவில் நடைபெறும் எந்தவொரு உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க முடியாது. பிசிசிஐ தொடர்பான எந்த நிதியுதவியும் பெற முடியாது. இந்த கடினமான விதிமுறைகள் இன்னும் நடைமுறையில் இருக்கிறது.


இருப்பினும் சில வீரர்கள் அத்தகைய ஒப்பந்தங்கள் ஏதும் வேண்டாம் என முறித்துக் கொண்டு இப்போது சர்வதேச கிரிக்கெட் லீக்குகளில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், 2003 ஆம் ஆண்டில் ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவர் ஸ்காட்லாந்து அணிக்காக விளையாடி இருக்கிறார். இது முழுக்க முழுக்க பிசிசிஐ கொடுத்த சிறப்பு அனுமதியின் அடிப்படையிலேயே ஸ்காட்லாந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார் டிராவிட்.


ஸ்காட்லாந்தில் இருக்கும் என்ஆர்ஐ குழுக்கள் சிறப்பு நிதி ஒன்றை திரட்டுவதற்காக இந்த போட்டியை ஏற்பாடு செய்தன. 11 ஒருநாள் போட்டிகளில் அந்த அணிக்காக விளையாடிய டிராவிட் 2 சதம் மற்றும் 8 அரைசதங்கள் அடித்து அந்த சீசனில் சுமார் 600 ரன்கள் எடுத்தார். இருப்பினும் அந்த போட்டிகள் அனைத்திலும் ஸ்காட்லாந்து தோல்வியை தழுவியது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், டிராவிட் விளையாடியபோது ஸ்காட்லாந்து அணியில் இருந்த 19 வயதான கைல் கோட்சர் இடம்பெற்றிருந்தார். அவர் தான் இந்திய அணியின் சுற்றுப் பயணத்தில் இப்போது அயர்லாந்து அணியின் கேப்டனாக இருக்கிறார்.  


மேலும் படிக்க | உலகக்கோப்பை தொடரில் பாண்டியாவுக்கு பின்னடைவா - பிசிசிஐயின் பிளான் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ