முதல் முறையாக இந்திய அணியில் கிடைத்த வாய்ப்பு! மகிழ்ச்சியில் ஐபிஎல் வீரர்!
ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். டாப்-ஆர்டர் பேட்டர் ராகுல் திரிபாதியும் 15 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்துள்ளார். ராகுல் திரிபாதிக்கு இந்திய ஒருநாள் அணியில் கொடுக்கப்பட்ட முதல் வாய்ப்பு இது ஆகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆசிய கோப்பை தொடங்குவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் முடிவடைகிறது. அதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா உட்பட பல முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை. ஷிகர் தவான் மீண்டும் கேப்டனாக இடம்பெற்றுள்ளார்.
மேலும் படிக்க | 20 ஓவர் கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக் அரிய சாதனை
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் போது வாஷிங்டன் மற்றும் தீபக் இருவரும் கடைசியாக இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் விளையாடினர். கடைசியாக சாஹர் பிப்ரவரி 2022-ல் சர்வதேச போட்டியில் விளையாடினார். பின்பு தொடை தசையில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு சென்றார். பின்னர் பெங்களூரில் உள்ள NCA-ல் உடற்தகுதி பெற்று வருகிறார். சரியான நேரத்தில் குணமடையத் தவறியதால் அவர் சென்னை சூப்பர் கிங்ஸிற்காக ஐபிஎல் 2022 போட்டியில் விளையாடவில்லை. மறுபுறம், சுந்தர் ஐபிஎல் 2022-ன் போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களில் இடம்பெற வில்லை.
இந்தியாவின் அயர்லாந்தின் சுற்றுப்பயணத்திற்காக சமீபத்தில் தனது முதல் இந்திய அழைப்பைப் பெற்ற திரிபாதி, தற்போது 50-ஓவர் போட்டியில் இடம் பெற்றுள்ளார். மூன்று ODI போட்டியும் ஹராரேயில் நடைபெற உள்ளது. முதல் ஒரு நாள் போட்டி வரும் ஆகஸ்ட் 18 தேதி நடைபெற உள்ளது. அடுத்த இரண்டு ODI போட்டிகள் ஆகஸ்ட் 20 மற்றும் 22 தேதிகளில் நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்குகிறது.
இந்திய அணி: ஷிகர் தவான் (C), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (WK), சஞ்சு சாம்சன் (WK), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்.
மேலும் படிக்க | டி20 போட்டிகளில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ