`தோனிக்காக தான்...` ஒரே நாளில் ஓய்வு - முதல்முறையாக மனந்திறந்த ரெய்னா
Suresh Raina About MS Dhoni: தோனி ஓய்வு அறிவித்த அடுத்த அரைமணி நேரத்தில் ஏன் தானும் ஓய்வு அறிவித்தேன் என்பது குறித்து சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார்.
Suresh Raina About MS Dhoni: 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியை கிரிக்கெட் ரசிகர்கள் யாராலும் மறக்கவே முடியாது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அன்றுதான் இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்தார். 2019 உலகக்கோப்பையை தவறவிட்டதை அடுத்த, கொரோனா காலகட்டத்தில் தனது ஓய்வு அறிவிப்பை அவர் அறிவித்தார்.
அதே நாளில், தோனி அறிவித்த அடுத்த அரைமணிநேரத்தில் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அதிர்ச்சி அளித்தார். ரெய்னாவும், தோனியும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக பல ஆண்டுகளாக இணைந்து விளையாடினர். ஓய்வை அறிவிக்கும்போது, ரெய்னாவுக்கு வயது 33. ஆனால், அவர் கடைசியாக 2018இல் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில்தான் விளையாடியிருந்தார்.
இளம் வயதில் அவருடயை ஓய்வு அறிவிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஓய்வு அறிவிப்புக்கு இரண்டு வருடங்களுக்கு பின் அதுகுறித்து ரெய்னா தற்போது மனந்திறந்துள்ளார். குறிப்பாக, தோனி ஓய்வுபெற்ற அதேநாளில், ஏன் அவரும் ஓய்வை அறிவித்தார் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும் படிக்க | Video: இந்திய வீரர் அடித்த ஒரே அறை... அதிர்ந்த தினேஷ் கார்த்திக்
அதற்கு, அவர்,"நாங்கள் ஒன்றாக பல போட்டிகளில் விளையாடினோம். அவருடன் இந்தியாவுக்காகவும், சிஎஸ்கே அணிக்காகவும் விளையாடும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. எங்களுக்கு நிறைய அன்பு கிடைத்தது. நான் காஜியாபாத்தில் இருந்து வந்தார், தோனி ராஞ்சியில் இருந்து வந்தார். தோனிக்காக விளையாடினேன், பிறகுதான் நாட்டுக்காக விளையாடினேன். அதுதான் இணைப்பு. நாங்கள் பல இறுதிப் போட்டிகளில் விளையாடி, உலகக் கோப்பையை வென்றோம். அவர் ஒரு சிறந்த கேப்டன் மற்றும் ஒரு சிறந்த மனிதர்.
2021இல், ஐபிஎல் தொடரில் விளையாடிய ரெய்னா அதில் இருந்தும் ஓய்வு பெற்றார். அவர் 2022இல் ஐபிஎல் மெகா ஏலத்தில் தன்னைப் பதிவு செய்திருந்தார். ஆனால் அவரது அடிப்படை விலை ரூ. 2 கோடியாக வைத்திருந்த நிலையில், அவரை யாரும் அணியில் எடுக்கவில்லை.
2011 உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றியில் ரெய்னா முக்கிய பங்காற்றினார். லோயர் மிடில் ஆர்டரில் முக்கியப் பங்களிப்பைச் செய்தார். இடது கை பேட்டரான ரெய்னா 18 டெஸ்ட், 226 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ