இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் மார்ச் 7 ஆம் தேதி நடக்கிறது. இந்த தொடரில் ஏற்கனவே நான்கு போட்டிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் அதில் 3 -1 என இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலிலும் முதல் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. இருப்பினும் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாகும். அதனால் இந்திய அணி இப்போட்டியை மெத்தனமாக எடுத்துக் கொள்ளாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதற்கேற்ப இந்திய அணியும் பிளேயிங் லெவனையும் அமைந்திருக்கிறது. கடந்த டெஸ்ட் போட்டியில் இறங்கிய இந்திய அணியே இப்போட்டியிலும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஒரு மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இதுவரை பேட்டிங்கில் ஜொலிக்காத ரஜத் படிதார் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேறொரு இளம் வீரருக்கு இந்திய அணி வாய்ப்பு கொடுக்கலாம் என தெரிகிறது. இந்த சூழலில் தான் தர்மசாலாவில் இருக்கும் இந்திய அணியுடன் ரிங்கு சிங் இணைந்துள்ளார்.


மேலும் படிக்க | ரோகித் சர்மாவை வீழ்த்த பிளான் போட்ட 2 மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்..!


அவர், ஒருவேளை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் விளையாடுவதற்காக சென்றாரா? என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்தது. ஆனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்காக அங்கு செல்லவில்லை. இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துகின்றன. அதில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுக்கான போட்டோ ஷூட் தர்மசாலாவில் பிசிசிஐ நடத்தியிருக்கிறது. அந்த போட்டோ ஷூட்டில் தான் ரிங்கு சிங் கலந்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் ரிங்கு சிங் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. 


இந்த போட்டோஷூட்டை முடித்தவுடன்  கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக இருந்த பிரண்டென் மெக்கலமுடன் ரிங்கு சிங் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பகிர்ந்திருக்கிறார். இதனிடையே 20 ஓவர் உலக கோப்பைக்கான அணியில் இடத்தை உறுதி செய்திருக்கும் ரிங்கு சிங்கிற்கு இப்போதே ரசிகர்கள் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.


தர்மசாலாவில் 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:


ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஆர். அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.


இந்தியா, இங்கிலாந்து அணிகளின் 5 டெஸ்ட் போட்டிகளின் விவரம்


முதல் டெஸ்ட்: ஜனவரி 25-29, ஹைதராபாத் (இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி)
2வது டெஸ்ட்: பிப்ரவரி 2-6, விசாகப்பட்டினம் (இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி)
3வது டெஸ்ட்: பிப்ரவரி 15-19, ராஜ்கோட் (இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி)
4வது டெஸ்ட்: பிப்ரவரி 23-27, ராஞ்சி (இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி)
5வது டெஸ்ட்: மார்ச் 7-11, தர்மசாலா.


மேலும் படிக்க | தோனியின் திடீர் அறிவிப்பு... கேப்டன்ஸியில் இருந்து விலகலா? - என்ன விஷயம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ