ஒடிசா ரயில் விபத்து உயிரிழப்பு! ரோஹித் சர்மா ரூ 15 கோடி நன்கொடை கொடுத்தாரா?
Captain Rohit sharma: ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரோஹித் சர்மா ரூ 15 கோடி நன்கொடை அளித்தார் என்ற செய்தி பரவலாக வைரலாகி வருகிறது. உண்மை என்ன?
லண்டன்: WTC இறுதிப் போட்டியில் அணியை வழிநடத்தத் தயாராகி வரும் ரோஹித் ஷர்மா தொடர்பான ஒரு செய்தி தற்போது வைரல் ஆகி வருகிறது. ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரோஹித் சர்மா ரூ 15 கோடி நன்கொடை அளித்தார் என்ற செய்தி, லண்டன் போட்டிக்கு முன்னதாக வைரலாகி வருகிறது. ஒடிசாவில் சுமார் 300 பயணிகளின் உயிரைப் பறித்த ரயில் விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து, சோகத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா ரூ.15 கோடி நிதியுதவி செய்ததாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது?
ரோஹித் ஷர்மா நன்கொடை அளித்தாரா?
உண்மையில் ரோஹித் ஷர்மா 15 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்தாரா? என்ற கேள்விகளுக்கு விடை என்ன? சரி, உண்மை என்னவென்றால், இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் இல்லை, எனவே அதை உறுதிப்படுத்த முடியாது.
ரோஹித் ரூ 15 கோடி நன்கொடை அளித்ததாக ட்விட்டரில் ஏன் டிரெண்டாகிறது?
ரோஹித் சர்மா நன்கொடை
WTC இறுதிப் போட்டிக்கு முன்னதாக, ரோஹித் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த போதும், ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்ததாக எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை.
மேலும் படிக்க - WTC Final 2023: சச்சின், டான் பிராட்மேனின் சாதனைகளை தகர்க்கப்போகும் விராட் கோலி..
நன்கொடை தொடர்பான எதிர்ப்பார்ப்பு ஏன்?
கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் ரோஹித் சர்மா ரூ.80 லட்சம் நன்கொடை அளித்துள்ளார் என்பதன் அடிப்படையில், அவர் தற்போதும் நன்கொடை அளிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கலாம்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக ரோஹித் சர்மா ரூ.80 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். அவர் PM CARES நிதிக்கு ரூ 45 லட்சமும், மகாராஷ்டிராவின் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ 25 லட்சமும், ஜொமேட்டோ ஃபீடிங் இந்தியாவுக்கு ரூ 5 லட்சமும், தெருநாய்கள் நலனுக்காக ரூ 5 லட்சமும் நன்கொடையாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஒடிசாவில் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் எனது இதயம் நெகிழ்கிறது. துக்கத்தில் வாடும் குடும்பங்களுக்கு கடவுள் பலம் தரட்டும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன், என விபத்து குறித்து கேப்டன் ரோகித் ஷர்மா டிவிட்டரில் இரங்கல் தெரிவித்திருந்தார்.
ரயில் விபத்தில் சிக்கி உரிழந்தவர்களின் குழந்தைகளுக்காக சேவாக் இன்டர்நேஷனல் பள்ளியில் இலவசக் கல்வியை வழங்குவதாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதுவும் தற்போதைய கேப்டனும், ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வார் என்ற எதிர்பார்ப்பில் எழுந்த வதந்தியாக இருக்கலாம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று பிற்பகல் 3:00 மணிக்கு மோதுகின்ரன.. இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியின் டாஸ் பிற்பகல் 2.30 மணிக்கு போடப்படும். இரு அணிகளும் முதன்முறையாக இங்கிலாந்து ஆடுகளத்தில் மோதுகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ