ICC WTC Final 2023 போட்டி ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே நடைபெற உள்ளது. IND vs AUS WTC 2023 இறுதிப் போட்டி இன்று முதல் (ஜூன் 7) முதல் ஜூன் 11 வரை நடைபெற உள்ளது. லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணி ஐசிசி டெஸ்ட் கோப்பையை கைப்பற்றும். ஐசிசி டபிள்யூடிசி புள்ளிகள் பட்டியலில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள் முதல் இரண்டு இடத்தில் உள்ளன. புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. IND vs AUS WTC 2023 இறுதிப் போட்டியைப் பார்த்து, யார் கோப்பையை வெல்வார்கள் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் போது ஆஸ்திரேலியா மொத்தம் 19 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற நிலையில், இந்தியா 18 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது. இன்று நடக்கவுள்ள இந்தியா vs ஆஸ்திரேலியா WTC 2023 இறுதிப் போட்டியைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து சமீபத்திய விவரங்களும் இங்கே உள்ளன.
மேலும் படிக்க | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கவுண்ட்டவுன் ! ரோஹித் ஷர்மாவுக்கு குவியும் பாராட்டு
இந்தியா vs ஆஸ்திரேலியா WTC 2023 இறுதிப் போட்டியின் தேதி மற்றும் நேரம் என்ன?
IND vs AUS WTC இறுதிப் போட்டி 2023 ஜூன் 7 முதல் ஜூன் 11 வரை நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்தியா vs ஆஸ்திரேலியா WTC 2023 இறுதிப் போட்டி நடைபெறும் இடம் எது?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா WTC 2023 இறுதிப் போட்டி இங்கிலாந்தின் லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தியாவில் இந்தியா vs ஆஸ்திரேலியா WTC 2023 இறுதிப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை எங்கே பார்ப்பது?
இந்தியாவில் உள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் IND vs AUS WTC இறுதி 2023 நேரடி ஒளிபரப்பைப் பார்க்கலாம். கிரிக்கெட் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஆப்ஸ் மற்றும் இணையதளத்தில் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பை தாங்கள் விரும்பும் இடத்தில் இருந்து பார்க்கலாம்.
இந்திய அணியில் தற்போது வரை எந்த வீரருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்திய அணியில் ஐந்து சீமர்கள் மற்றும் மூன்று ஸ்பின்னர்கள் பந்துவீச்சைத் தேர்வு செய்ய உள்ளனர். முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் வேகப்பந்து வீச்சுக்கு உறுதியான நிலையில், ரவீந்திர ஜடேஜா தனது ஆல்ரவுண்ட் திறன்களின் காரணமாக விளையாடும் லெவன் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்திய அணி கூடுதல் ஒரு பவுலருடன் செல்ல வேண்டுமா? அல்லது ஸ்பின்னரை எடுக்க வேண்டுமா என்ற குழப்பத்தில் உள்ளது. 2023 இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் காயம் அடைந்த உமேஷ் யாதவ் மற்றும் ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் அணியுடன் இங்கிலாந்துக்கு பயணம் செய்து தேர்வுக்கு வந்துள்ளனர். எவ்வாறாயினும், 2021 ஆம் ஆண்டின் இரண்டு டெஸ்ட் போட்டிகளை வென்ற இந்திய அணியின் ஒரு பகுதியாக இருந்த யாதவ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரில் ஒருவர் இடம் பெறலாம்.
இந்திய அணி: ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஸ்ரீகர் பாரத், இஷான் கிஷன், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட்.
ஆஸ்திரேலியா அணி: பேட் கம்மின்ஸ்\, மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், ஸ்காட் போலண்ட், ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லியோன், டாட் மர்பி, மிட்செல் ஸ்டார்க்.
மேலும் படிக்க - WTC Final 2023: சச்சின், டான் பிராட்மேனின் சாதனைகளை தகர்க்கப்போகும் விராட் கோலி..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ