டிக்டாக் மூலம் பிரபலமான காபி லேம் இன்ஸ்டாகிராமில் 115 மில்லியன் பாலோவர்ஸ்களை கொண்டுள்ளார். செனகல்-இத்தாலியாவை சேர்ந்த இவர் உலகளவில் இரண்டாவது அதிக பாலோவர்ஸ்களை பெற்றுள்ளார்.  இவரது வீடியோக்களை பலரும் கண்டு ரசிப்பர்.  கொரோனா பெருந்தொற்றால் வேலை இழந்த இவர் டிக்டாக்கில் வீடியோக்கள் பதிவிட ஆரம்பித்தார்.  காபி லேம்மின் வித்தியாசமான கன்டென்ட் உலகம் முழுவதும் உள்ள மக்களை சென்றடைந்தது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சச்சின் செஞ்சுரி அடிச்சாவே இந்தியா தோத்துடுமா? - உண்மை என்ன?


தற்போது கிரிக்கெட் உலகின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இவரை போல உடல் மொழியில் ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார்.  தண்ணீர் வீணாவதை தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ள சச்சின், குழாயில் தண்ணீர் லீக் ஆகாமல் இருக்கும் படி மூடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.  இந்த வீடியோவில், " ஒவ்வொரு துளியும் முக்கியமானது, குழாயைத் திறப்பது போன்று, அதனை இறுக்கமாக மூடுவதும் அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


 



இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக இருந்த சச்சின் ஒய்வு பெற்ற பிறகு, மும்மை இந்தியன்ஸ் அணியில் சிறிது காலம் விளையாடினார்.  அதன் பின் அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார்.  தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக உள்ளார்.  அவரது மகனான அர்ஜுன் டெண்டுல்கரை மும்மை அணி ஏலத்தில் 30 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது.


மேலும் படிக்க | காயமடைந்த பறவைக்கு உணவளிக்கும் சச்சின்! வைரல் வீடியோ!


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR