India National Cricket Team: 13ஆவது ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் (ICC World Cup) கடந்த அக். 5ஆம் தேதி தொடங்கியது. பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் கடந்த 45 நாள்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த தொடர் நேற்றுடன் (நவ. 19) நிறைவு பெற்றது. இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணி (Team India) இந்த உலகக் கோப்பை தொடரில் எந்த போட்டியிலும் பேட்டிங் ஆல்-அவுட்டாகாமலும் குறிப்பாக தோல்வியடையாமலும் இறுதிப்போட்டி (IND vs AUS Final 2023) வரை வந்தது. ஆனால், கடைசி கட்டத்தில் கோப்பையை எட்ட இந்திய அணி தவறிவிட்டது. இந்தியா வெல்லும் பலரும் நம்பிக்கையுடன் இருந்தபோது, ஆஸ்திரேலியா இந்தியர்களின் கனவை தகர்த்தெறிந்தது எனலாம். 


நேற்றைய உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் கில் அவுட்டானதில் இருந்தே இந்திய அணிக்கு பிரச்னை தொடங்கிவிட்டது. அது ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் என நட்சத்திர வீரர்கள் ஜொலிக்காத போது இன்னும் தீவிரமடைந்தது எனலாம். பந்துவீச்சில் ஆரம்பத்தில் சிறப்பாக செயல்பட்டாலும் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்கத் தவறியது மட்டுமின்றி எளிமையாக சிங்கிள்ஸ் கொடுத்தது என பல பின்னடைவுகள் இந்திய அணிக்கு ஏற்பட்டது.


மேலும் படிக்க | உலக கோப்பை: 6வது முறையாக மகுடம் சூடிய ஆஸ்திரேலியா - இந்தியாவின் கனவு தகர்ந்தது


இந்திய அணி இந்த தொடரில் பெற்ற 10 வெற்றிகளுக்கும் எப்படி ஒரு தனிநபரை கைக்காட்ட முடியாதா அதேபோல்தான் நேற்றைய தோல்விக்கும் எந்த ஒரு தனிநபரையும் நாம் கைக்காட்ட முடியாது எனலாம். டிராவிஸ் ஹெட் - லபுஷேன் ஆகியோர் சற்று பார்ட்னர்ஷிப்பை அமைத்தவுடனே இந்தியா போட்டியின் மீதான பிடிப்பை விட்டுவிட்டது எனலாம். இருப்பினும், இந்திய அணியில் இந்த போட்டியோடு ஒருநாள் அரங்கில் சில வீரர்கள் கழட்டிவிடப்படுவார்கள் அல்லது ஓய்வை அறிவிப்பார்கள் எனலாம். அவர்கள் குறித்தும், அதன் காரணம் குறித்தும் இதில் காணலாம்.


சூர்யகுமார் யாதவ்


சூர்யகுமாரை யாதவை (Suryakumar Yadav) ஆரம்பித்தில் இருந்தே பலரும் விமர்சித்து வந்தனர். கடைசி 20, 15 ஓவர்களில் அதிரடியாட்டம் விளையாடவே இந்தியா இவரை எடுத்துள்ளது என்பது ஏற்கத்தக்கது அல்ல குற்றஞ்சாட்டி வந்தனர். உலகக் கோப்பை போன்ற ஒரு தொடரில் எந்த இடத்தில் இறங்கினாலும் ரன்களை சேர்க்க வேண்டியது வீரர்களின் திறன். ஆனால், டி20 மனநிலையில் ஒருநாள் போட்டிகளை அணுகுவது தவறானதாக அமையும் என்றனர். அது நேற்றைய போட்டியில் நீரூபணமாகிவிட்டது. எனவே, ஒருநாள் அரங்கில் சூர்யகுமாரின் எதிர்கால வாய்ப்பு மிகவும் குறைவுதான்.


ரோஹித் சர்மா 


எல்லோருக்கும் தெரிந்ததுதான் ரோஹித் சர்மா (Rohit Sharma) இந்த உலகக் கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஒதுங்க அதிக வாய்ப்புள்ளது என்பது. வயது, ஃபிட்னஸ் போன்றவை அடிப்படை காரணம் என்றாலும் ஓப்பனிங்கில் சுப்மான் கில்லுடன் இனி புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கவ தேர்வுக்குழு நினைக்கும். டி20 போட்டிகளிலும் ரோஹித்தின் இடம் நிலையாக இல்லாததால், இனி டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ரோஹித்தை காண முடியும் என ரசிகர்கள் கவலை கொண்டுள்ளனர். 


ஷர்துல் தாக்கூர்


இந்திய அணி ஷர்துல் தாக்கூரை (Sharduk Thakur) 8ஆவது இடத்தில் பேட்டிங் செய்யக் கூடிய ஒரு ஆல்-ரவுண்டராக பார்த்தது. ஆனால், இவரிடம் இருந்து பெரிய ஆட்டத்தை நாம் சமீப காலங்களில் பார்க்க முடியவில்லை. உலகக் கோப்பையில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினாலும் ஆட்டத்தில் இவரின் ஆதிக்கம் குறைவுதான். எனவே, எட்டாவது இடத்தில் இந்திய அணி வேறு ஒருவரை தேடும் எனலாம்.  


மேலும் படிக்க | உலகக் கோப்பை எனக்கு அழைப்பு இல்லை... இந்திய அணியின் சாம்பியன் கேப்டன் கருத்து!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ