Sanjay Manjrekar, Gautam Gambhir | இந்திய கிரிக்கெட்அணி பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்த தொடரில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3-0 என படுதோல்வி அடைந்ததால் இப்போதைய சூழலில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது கடினமாகியுள்ளது. இது குறித்து ஆஸ்திரேலியா புறப்பட்டு செல்லும் முன் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பத்திரிக்கையாளர் சந்தப்பில் விளக்கம் அளித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கவுதம் கம்பீர் பேசும்போது, "நாங்கள் இப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பற்றி சிந்திக்கவே இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபியில் முழு கவனத்தையும் செலுத்த இருக்கிறோம். ரோகித் சர்மா, விராட் கோலி பார்ம் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. இருவரும் சிறப்பான பிளேயர்கள். இன்னும் சாதிக்க வேண்டும் என வேட்கையோடு இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் சிறப்பாக ஆடுவார்கள். விரைவில் பார்முக்கு திரும்புவார்கள்." என தெரிவித்தார். பயிற்சியாளர் பொறுப்பில் எந்த நெருக்கடியையும் சந்திக்கவிலை என கூறிய அவர், இப்பொறுப்பை ஏற்கும்போதே இவ்ளவு நெருக்கடிகள் இருக்கும் என்று தெரிந்து தான் ஏற்றதாக கூறினார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பு என்பது மிகவும் மதிப்பு மிக்கது, அப்பொறுப்பில் இருக்கும்போது விமர்சனங்கள் வரத் தான் செய்யும் என்றும் கவுதம் கூறியுள்ளார்.


மேலும் படிக்க | பெர்த் டெஸ்டில் ரோஹித் சர்மா இல்லை! இவர் தான் கேப்டன்! கம்பீர் அதிரடி முடிவு!


தொடர்ந்து கவுதம் கம்பீர் பேசும்போது, " இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருக்கும்போது இவ்வளவு நெருக்கடிகள், விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதன்மீது எனக்கு எந்த பார்வையும் இல்லை. விமர்சனங்களை ஏற்க தயாராகவே இருக்கிறேன். பெர்த் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடாதது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. அவர் விளையாடுவார் என்றே எதிர்பார்க்கிறேன். ஒருவேளை அவர் இல்லை என்றால் இந்திய அணியின் ஒப்பனிங் பேட்ஸ்மேனாக அபிமன்யூ ஈஸ்வரன் அல்லது கேஎல் ராகுல் இருப்பார்கள். கேஎல் மிகச்சிறந்த பிளேயர். அவர் எந்த இடத்திலும் விளையாடக்கூடிய திறமை உள்ளவர். அவரைப் போன்ற பிளேயர்கள் உலக கிரிக்கெட்டில் யாரும் இல்லை" என தெரிவித்தார். 


அவரின் இந்த பேட்டியை பார்த்த சஞ்சய் மஞ்சரேக்கர், கம்பீர் பேட்டி கொடுக்கக்கூட லாயக்கில்லை என கடுமையாக விமர்சித்துள்ளார். அவரின் வார்த்தைகள் அந்தளவுக்கு தரமானதாக இல்லை என கூறியிருக்கும் அவர், ரோகித் சர்மா அல்லது தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினால் சிறப்பாக இருக்கும் என தெரிவித்தார். கவுதம் கம்பீர் மீதான அவரின் இந்த கடுமையான விமர்சனம் சோஷியல் மீடியாவில் கவனத்தைப் பெற்றுள்ளது. 


பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடும் இந்திய அணி முதல் ஆஸ்திரேலியா சென்றுவிட்டது. விராட் கோலி, வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில், ஜெய்ஷ்வால், முகமது சிராஜ் ஆகியோர் ஆஸ்திரேலியா சென்றிருக்கின்றனர். இரண்டாவது கட்டமாக சில பிளேயர்கள் செல்ல இருக்கின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா விளையாடுவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக முடிவாகவில்லை. இரண்டாவது குழந்தை பிறக்கும் நேரம் என்பதால் ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியின்போது குடும்பத்துடன் இருக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | Sanjay Bangar | பெண்ணாக மாறிய பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் மகன் - போட்டோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ